3 நாளில் முடிந்த பிங்க்பால் டெஸ்ட். 4 ஆவது நாள் டிக்கெட் வாங்கியவர்கள் நிலைமை என்ன தெரியுமா ?

Ganguly

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான பிங்க் பால் டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக கடந்த 22ம் தேதி துவங்கியது. இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்த காரணத்தினால் முதல் நான்கு நாட்கள் டிக்கெட்டும் விற்றுத் தீர்ந்தன என்று கங்குலி ஏற்கனவே தெரிவித்தார்.

Cup

ஆனால் போட்டி மூன்றாம் நாள் காலை ஒரு மணி நேரத்திலேயே முடிவடைந்ததால் தற்போது நான்காம் நாளுக்கு டிக்கெட் எடுத்தவர்கள் குறித்த முக்கிய அறிவிப்பை நேற்று கங்குலி வெளியிட்டார்.

அதன்படி போட்டி மூன்று நாட்களில் முடிந்ததால் நான்காவது நாள் டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் ஏமாறாத வண்ணம் அவர்களுக்கான டிக்கெட் தொகையை திருப்பித் தருவதாக பெங்கால் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதாக நேற்று கங்குலி தெரிவித்தார். இதனால் அதனால் டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் அதை மீண்டும் திரும்பக் கொடுத்து தங்களது பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ind 1

இந்திய அணிக்கு இதுவே முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாகும். இனிவரும் தொடர்களில் இந்தியா முழுவதும் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்த அட்டவணை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கங்குலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -