
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வந்தது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்களின் முடிவிலேயே இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்த இங்கிலாந்து அணியானது இந்த தொடரை வெகு எளிதாக கைப்பற்றும் என்று பலராலும் பேசப்பட்டது.
ஆனால் நான்காவது போட்டியின் போது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அந்த போட்டியை டிரா செய்தது. அதுமட்டும் இன்றி நடைபெற்று முடிந்த ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியையும் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரானது இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமநிலை அடைந்துள்ளது.
கடந்த ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கிய இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது இன்று நடைபெற்ற ஐந்தாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியானது இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரை சமன் செய்திருந்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசியிருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது : உண்மையிலேயே இந்த கடைசி போட்டியில் என்னால் விளையாட முடியாமல் போனது சற்று வருத்தம் தான். இந்த போட்டியும் ஐந்தாம் நாள் வரை வந்து மிகச் சிறப்பாக முடிவடைந்துள்ளது. இரண்டு அணிகளுமே களத்தில் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் இந்த ஒட்டுமொத்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பாக அமைந்தது.
இந்த தொடரின் இறுதி போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. இருந்தாலும் இந்த தொடரில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன். ஏனெனில் அணியில் இடம்பிடித்திருந்த ஒவ்வொருவருமே இந்த தொடரில் தங்களது முழு பங்களிப்பை வழங்கி உள்ளனர்.
இதையும் படிங்க : 5 ஆவது போட்டியில் நாங்கள் வெற்றிபெற காரணமே இதுதான்.. புகழ்ந்து தள்ளிய – கேப்டன் சுப்மன் கில்
அதிலும் குறிப்பாக போட்டியின் சூழல் கடினமாக இருந்த போதெல்லாம் தனித்தனியே வீரர்கள் அணியின் நலனுக்காக நின்று இருக்கிறார்கள். இப்படி ஒரு அணியாக இணைந்து நாங்கள் இந்த தொடரில் செயல்பட்ட விதத்தை நினைத்து உண்மையிலேயே பெருமையாக இருப்பதாகவும் பென் ஸ்டோக்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.