10 ரன்ஸ் வெச்சு இந்தியா ஜெய்க்கவா போறாங்க.. ஸ்டுப்பிட் மாதிரி பண்ணாதன்னு அவர்கிட்ட சொன்னேன்.. ஸ்டோக்ஸ் பேட்டி

Ben Stokes
- Advertisement -

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்தியா டிரா செய்து அசத்தியது. அந்தப் போட்டியில் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா 0/2 என சரிந்தது. அதனால் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு கேப்டன் கில் 103, ராகுல் 90 ரன்கள் அடித்து கை கொடுத்தனர்.

அடுத்ததாக ஜோடி சேர்ந்த சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோர் இங்கிலாந்துக்கு தொல்லையாக மாறி இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றி சதத்தை நெருங்கினார்கள். அப்போது இனிமேலும் இந்தியாவை வீழ்த்த முடியாது என்று நினைத்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்டியை முடித்துக் கொள்வதாக கை கொடுக்க வந்தார். இருப்பினும் சுந்தர், ஜடேஜா சதத்தை தடுக்கும் நோக்கத்தில் டிரா செய்ய வந்த அவருடைய அழைப்பை இந்திய கேப்டன் கில் ஏற்கவில்லை.

- Advertisement -

10 ரன்ஸ் வெச்சு:

அதனால் தொடர்ந்து விளையாடிய ஜடேஜாவும் சுந்தரும் சதத்தை அடித்ததும் இந்தியா போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. அந்தப் போட்டியில் இந்தியர்களின் சதத்தை தடுக்கும் நோக்கத்தில் செயல்பட்ட ஸ்டோக்ஸை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றிய சுந்தர், ஜடேஜா அந்த 10 ரன்களை வைத்து வெற்றி பெற வைக்கப் போகிறார்களா என்று கருதி டிக்ளேர் செய்ய வந்ததாக ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

அதனாலேயே முட்டாள்தனமாக எதுவும் செய்யாமல் பவுலிங் செய்யுமாறு பகுதி நேர பவுலரான ஹரி ப்ரூக்கிடம் பந்தை கொடுத்ததாகவும் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜடேஜா, சுந்தர் இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது வெற்றியை எங்கள் பக்கம் திறந்தது. அப்போது அவர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் அபாரமானது”

- Advertisement -

ஸ்டோக்ஸ் விளக்கம்:

“80*, 90* என்ற ஸ்கோருடன் உங்களுடைய அணியை மோசமான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றி வெளியேறுவதை விட, சதத்தை அடித்து வெளியேறுவதில் அதிக திருப்தி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதைத்தான் நீங்கள் அணிக்காக செய்துள்ளீர்கள். அந்த 10 ரன்கள் கடைசி போட்டிக்கு முன்பாக உங்களுடைய அணியை மோசமான நிலையிலிருந்தும் தொடரை இழக்கும் அபாயத்திலிருந்தும் காப்பாற்றி விட்டீர்கள் என்பதை மாற்றப் போவதில்லை”

இதையும் படிங்க: மண்டையில் அடிப்போம் பரவால்லயா? ஜடேஜாவை மிரட்டி கெஞ்சிய 4 இங்கி வீரர்கள்.. வெளியான ஸ்டம்ப் மைக் ஆதாரம்

“அந்த சமயத்தில் ட்ரா மட்டுமே சாத்தியமாக இருந்தது. எனவே எங்களுடைய முன்னணி பவுலரை பந்து வீச வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஹரி ப்ரூக் மட்டுமே இதுவரை பவுலிங் செய்ததில்லை. அதனால் ஸ்டுப்பிட் போல எதுவும் செய்யாதீர்கள் என்று மட்டும் அவரிடம் சொல்ல வேண்டியிருந்தது. ஏற்கனவே நாம் 200+ ஓவர்களை போட்டுவிட்டதால் காயமடையாமல் தேவையானதை மட்டும் செய்யுங்கள் என்று அவரிடம் சொன்னேன்” எனக் கூறினார்.

Advertisement