- Advertisement -
உலக கிரிக்கெட்

சிலரின் லாபத்தால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அழிவு, ஐசிசியும் கவனிப்பதில்லை – ஐபிஎல்’லை தாக்கிய பென் ஸ்டோக்ஸ் தைரிய பேச்சு

நூற்றாண்டுக்கு முன்பு டெஸ்ட் போட்டிகளாக துவங்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் நாளடைவில் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப 50 ஓவர் போட்டிகளாக மாறி இன்று 20 ஓவர் போட்டிகளாக வளர்ந்துள்ளது. அதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை விட 3 – 4 மணி நேரங்களில் எதிர்பாராத த்ரில்லர் திருப்பங்களை பரிசளிக்கும் டி20 போட்டிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதை வைத்து முதலில் தரமான இளம் வீரர்களை உருவாக்கும் நோக்கத்தில் துவங்கப்பட்ட ஐபிஎல், பிக்பேஷ் போன்ற டி20 தொடர்கள் இன்று வியாபாரமாக மாறியுள்ளன. குறிப்பாக விஸ்வரூப வளர்ச்சி கண்ட ஐபிஎல் தொடரை பார்த்து உலகின் அனைத்து நாடுகளும் தங்களுக்கென்று தனியாக டி20, டி10 தொடர்களை உருவாக்கின.

அதைப் பார்த்து நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று தென்னாப்பிரிக்கா மற்றும் அமீரக நாடுகள் 2023இல் புதிதாக 2 டி20 தொடர்களை உருவாக்கியுள்ளன. இங்கு விஷயம் என்னவெனில் இந்த புதிய தொடர்களால் உலக அளவில் நிறைய தரமான கிரிக்கெட் வீரர்கள் உருவாகுகிறார்கள். அவர்களது வாழ்வாதாரமும் உயர்கிறது. ஆனால் புதிதாக இந்த தொடர்கள் உருவான வேளையில் வருடத்தில் 365 நாட்களுக்கு பதிலாக 700 நாட்கள் இருப்பதில்லை. அதாவது ஐபிஎல் போன்ற டி20 தொடர்களின் வருகையால் சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை குறைந்து மிகவும் நெருக்கடியை சந்தித்துள்ளன.

- Advertisement -

கிரிக்கெட்டை காப்பாத்துங்க:
எடுத்துக்காட்டாக 60 போட்டிகளாக நடைபெற்று வந்த ஐபிஎல் இந்த வருடம் 74 போட்டிகளாக விரிவடைந்த நிலையில் 2025இல் 84, 94 போட்டிகளாக மேலும் விரிவடைய உள்ளது. அதனால் சர்வதேச போட்டிகளை மிகுந்த நெருங்கிய இடைவெளிக்குள் நடத்த வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. குறிப்பாக கிரிக்கெட்டின் உயிர்நாடியாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் டி20 போட்டிகளின் வருகை அதில் விளையாடும் வீரர்களுக்கு லாபம் என்றாலும் சர்வதேச கிரிக்கெட்டை அழிக்கும் வகையில் இருப்பதாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

எனவே இங்கிலாந்து உட்பட அனைத்து நாடுகளும் தங்களது இஷ்டத்துக்கு சர்வதேச அட்டவணையில் மாற்றம் செய்வதை ஐசிசி தான் எப்படியாவது தடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். துவண்டு கிடக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான அணுகுமுறையை பின்பற்றி அனைவரும் பாராட்டு வகையில் இங்கிலாந்தை வெற்றி நடை போட வைத்துள்ள அவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 16.50 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இருப்பினும் தம்மைப் பொறுத்த வரை டெஸ்ட் உட்பட சர்வதேச போட்டிகள் தான் முக்கியம் என்று தைரியமாக கூறும் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரை மறைமுகமாக தாக்கி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு விரும்பாத கோணத்தில் அனைவராலும் பேசப்படுகிறது. அது புதிய வடிவங்கள் (டி20) மற்றும் உரிமையாளர்களைக் கொண்ட அணிகளால் (ஐபிஎல், பிக்பேஷ்) ரசிகர்களின் கவனத்தை இழந்து வருகிறது. நிறைய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வெளியே நிறைய வாய்ப்புகளை பெறுவதை நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால் என்னை பொறுத்த வரை விளையாட்டுக்கு டெஸ்ட் மிகவும் முக்கியமானது. நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதையே விரும்புகிறேன். அதில் எங்களால் வித்தியாசமாக ஏதாவது செய்ய முடியும் என்று உணர்ந்தேன்”

“டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டியின் முடிவை பார்க்காமல் ஒவ்வொரு நாளையும் பொழுதுபோக்காக வைப்பதில் அனைவரும் கவனம் செலுத்துங்கள். அதில் என்ன நடக்கப் போகிறது என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ள முடியாத வகையில் விளையாடுங்கள். அதனால் பந்து வீசுவதற்கு முன்பாகவே என்ன நடக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் ஏற்பட்டால் அங்கே தான் நீங்கள் உண்மையான வெற்றி பெறுவீர்கள். அதே போல் சர்வதேச போட்டிகளின் அட்டவணை யாருடைய கவனத்தையும் பெறுவதில்லை”

- Advertisement -

“எடுத்துக்காட்டாக டி20 உலகக்கோப்பைக்கு பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய ஒருநாள் தொடரை சொல்லலாம். அங்கே நடந்த 3 போட்டிகள் சரியான திட்டமிடுதல் இல்லாமையை காட்டியது. சிலர் நீங்கள் இங்கிலாந்துக்காக விளையாடுகிறீர்கள் அது போதுமானதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அங்கே இன்னும் நிறைய காரணிகள் உள்ளது”

இதையும் படிங்க37 வயசுல தினேஷ் கார்த்திக்கே திரும்பி வந்து விளையாடும்போது. இவர் ஆடக்கூடாதா? – முன்னாள் வீரர் அதிரடி

“மேலும் சர்வதேச கிரிக்கெட் தரமானதாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் அங்கே பலவிதமான அணிகள் மற்றும் வீரர்கள் ஓய்வெடுப்பதும் தேர்வு செய்யப்படுவதுமாக உள்ளனர். சர்வதேச கிரிக்கெட் செல்வதற்கு இது சிறந்த வழி அல்ல. இதற்கு அவர்கள் (ஐசிசி) தான் தீர்வு காண வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -
Published by