இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ரஹானே ஆகியோர் அது சிறப்பான ஆட்டத்தினால் முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
அதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 286 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அஸ்வின் சதம் அடித்து அசத்தினார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 482 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் செய்த செயல் ஒன்று தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் தனது ஆட்டத்தால் பெரிய தாக்கத்தை ஸ்டோக்ஸ் இதுவரை ஏற்படுத்தவில்லை. முதல் இன்னிங்சில் 2 ஓவர்கள் வீசி 16 ரன்களை விட்டுக்கொடுத்து அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. அதேபோன்று பேட்டிங்கிலும் பெரிதளவு சோபிக்காத அவர் 18 ரன்களை மட்டுமே அடித்தார்.
இந்நிலையில் 2வது இன்னிங்சை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் மூன்றாம் நாளான இன்று காலை சென்னை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக உணவு இடைவேளைக்கு முன்பாக ஸ்டோக்ஸ் தலைகீழாக சிறிது தூரம் நடந்தார். இதனை கவனித்த ரசிகர்கள் மைதானத்தில் அவருக்கு பெரிய அளவில் கைதட்டல்களை வழங்கினார்கள். மேலும் இந்த விடயம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Ben Stokes 😂😂😂 #INDvsENG #INDvENG pic.twitter.com/whsR6tkGuf
— Vijay Krishna (@UtdVijay) February 15, 2021
இன்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இங்கிலாந்து அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது. மேலும் நான்காவது நாளான நாளை விரைவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்த போட்டியில் தோல்வியடைவது உறுதி. மேலும் ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடிய அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.