நான் இந்திய வீரர்களை பற்றி அப்படி கூறவே இல்லை. பதறிய பென் ஸ்டோக்ஸ் – வருத்தத்துடன் கொடுத்த விளக்கம்

Stokes
- Advertisement -

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் தான் எழுதிய ‘ஆன் பயர்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்தில் இந்திய அணியின் வீரரான விராட் கோலி, ரோகித் சர்மா, மகேந்திரசிங் தோனி ஆகியோர் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வெற்றி பெற ஆர்வம் காட்டவில்லை என்பது போல் எழுதியிருந்தார்.

stokes

- Advertisement -

மேலும் அந்த போட்டியில் இந்திய வீரர்கள் செய்தவை எல்லாம் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் அந்த போட்டியில் இறுதிவரை பேட்டிங் செய்த தோனி மற்றும் ஜாதவ் ஆகியோர் வெற்றிக்காக ஒரு சிந்தனை கூட செய்யவில்லை என்றும், அவர்களின் யோசனை முழுவதும் ரன் ரேட்டில் மட்டுமே இருந்தது என்று பென் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டினை முன்வைத்து பாகிஸ்தான் முன்னாள் பந்து வீச்சாளர் சிக்கந்தர் டுவிட்டரில் வந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்தார். அதாவது பாகிஸ்தான் அணியை உலக கோப்பை தொடரில் இருந்து வேண்டுமென்றே வெளியேற்றுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து இடம் வேண்டுமென்றே தோற்றது. இதனை நாங்கள் முன்னரே கணித்து விட்டோம் என்று பதிவிட்டிருந்தார்.

Dhoni 1

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இதைத்தான் பென் ஸ்டோக்ஸ் தனது புத்தகத்தில் நேரடியாக குறிப்பிட்டுள்ளார் என்று பேசிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த பென் ஸ்டோக்ஸ் நீங்கள் அப்படி எதையும் எனது புத்தகத்தில் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் நான் அப்படி சொல்லவே இல்லை. இந்திய அணி எங்கள் அணிக்கு எதிராக விளையாடிய விதத்தினை மட்டுமே நான் குறிப்பிட்டு இருந்தேன்.

- Advertisement -

அதைத்தவிர நான் வேறு ஏதும் கூறவில்லை. எனது வார்த்தையை திருத்தி உங்களது வார்த்தையை சேர்த்து போட்டுவைத்து பேசாதீர்கள் என்று பதிலடி கொடுத்தார் பென் ஸ்டோக்ஸ். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 337 ரன்கள் குவித்தது அதற்கு பின்னர் ஆடிய இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Dhoni

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றில் இந்திய அணி அடைந்த ஒரே தோல்வி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியை லீக் சுற்றில் வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement