- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய தொடர் பெருசு தான்.. ஆனா இந்தியாவை விட பெரிய பரிசைத் தட்டி தூக்குவோம்.. பென் டக்கெட் விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இந்தியா கைப்பற்றியது. மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையைப் பின்பற்றி அதிரடியாக விளையாடுகிறோம் என்று மார்த்தட்டக்கூடிய இங்கிலாந்து கடந்த டி20 தொடரில் 4 – 1 (5) என்றக் கணக்கில் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் ஒருநாள் தொடரிலும் இந்திய அணியிடம் இங்கிலாந்து தோற்றது.

சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன் அந்த அணி சந்தித்த இந்த அடுத்தடுத்த தோல்விகள் இங்கிலாந்துக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்த சூழ்நிலையில் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியாவிடம் தோற்றாலும் அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம் என்று இங்கிலாந்து துவக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்தார். ஏனெனில் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவையே தோற்கடிக்கும் அளவுக்கு தங்களிடம் திறமை இருப்பதாகவும் அவர் கூறினார்.

- Advertisement -

ரசிகர்கள் விமர்சனம்:

அதற்கு ஃபைனல் போன்ற முக்கியமானப் போட்டியில் சரியான நேரத்தில் உச்சகட்ட செயல்பாடுகளில் வெளிப்படுத்துவது அவசியம் என்றும் கூறினார். எனவே இந்தியாவுக்கு எதிரான இந்த சாதாரண இருதரப்பு தொடரில் தோற்றாலும் தாங்கள் கவலைப்பட மாட்டோம் என்று டக்கெட் தெரிவித்தார். அவருடைய கருத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்தார்கள்.

குறிப்பாக நாட்டுக்காக விளையாடும் எந்தப் போட்டியிலும் தோற்கக் கூடாது என்ற எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டியதே ஒரு வீரரின் கடமை என்று ரசிகர்கள் தெரிவித்தனர். அதை விட்டுவிட்டு இங்கேயே இந்தியாவிடம் தோற்றால் எப்படி உங்களால் சாம்பியன்ஸ் டிராபியில் வெல்ல முடியும்? என்று ரசிகர்கள் அவரை விமர்சித்தார்கள். அதன் காரணமாக தற்போது பென் டக்கெட் தமது கருத்து பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.

- Advertisement -

டக்கெட் விளக்கம்:

அதில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது பெரியத் தொடர் என்று அவர் கூறியுள்ளார். ஆனாலும் இந்திய தொடரை விட பெரிய சாம்பியன்ஸ் டிராபியை தட்டித் தூக்குவதே தங்களுடைய இலக்கு என்றும் டக்கெட் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஒரு அணியாக எங்களுக்கு வெற்றி முடிவுகள் வேண்டும் என்பதே தெளிவான இலக்காகும்”

இதையும் படிங்க: இந்தக் காரணத்தால் சாம்பியன்ஸ் ட்ராபியில் கோலி அசத்துவாரு.. இந்தியா ஜெயிச்சா டான்ஸ் காத்திருக்கு.. கவாஸ்கர்

“இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது ஒரு மிகப்பெரிய தொடர். ஆனால் சரியான நேரத்தில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வது அதை விடப் பெரிது. அதையே நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மூன்றாவது போட்டி இன்று அகமதாபாத் நகரில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -