இந்திய அணியில் அவர் ஒரு உலகத்தரமான வீரர்.. ஆனா அவரை பத்தி யாரும் அதிகமா பேச மாட்றாங்க – பென் டக்கெட் கருத்து

Ducckett
- Advertisement -

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி இருந்தது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த தொடரில் முதல் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆனால் அதன் பிறகு நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்நிலையில் நடைபெற்று முடிந்த அந்த டெஸ்ட் தொடர் குறித்து தற்போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர துவக்க வீரரான பென் டக்கெட் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது சிறப்பான ஒன்று.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அந்த தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உண்மையாகவே நான் அவருக்கு ஒரு நல்ல பாராட்டினை கொடுத்தேன். என்னை பொருத்தவரை நிச்சயமாக ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்று நம்புகிறேன். ஏனெனில் அவர் எங்கள் அணிக்கு எதிராக மிகச்சிறப்பான ஆட்டத்தை அந்த தொடர் முழுவதுமே வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ஐந்தாவது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நான் இதை சொன்னேன். ஆனால் யாரும் அதை பெரிதாக பேசவில்லை. உண்மையிலேயே நம்ப முடியாத அளவுக்கு எங்கள் அணிக்கு எதிராக அந்த தொடரில் சிறப்பாக விளையாடியதாக கூறியிருந்தார். அவர் கூறியது போலவே இங்கிலாந்து அணிக்கு எதிரான அந்த டெஸ்ட் தொடரில் :

இதையும் படிங்க : கில்கிறிஸ்டை விட சிறந்த தோனி தலைமையில்.. தனது ஆல் டைம் கனவு உலக அணியை தேர்ந்தெடுத்த பசித் அலி

இரண்டு முறை இரட்டை சதம் அடித்த அவர் ஒட்டுமொத்தமாக ஐந்து போட்டிகளில் 712 ரன்கள் குறித்து தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவ்வபோது வாய்ப்புகளை பெற்று விளையாடி வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுடன் தற்போது ஜெய்ஸ்வால் நிரந்தர இடத்தினை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement