உலக கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய தொடர்களை நடத்தி வருகிறது. மேலும் தற்போது டாப் 10 அணிகள் பங்குபெறும் டி20 சாம்பியன் கோப்பை ஒன்றை நடத்தவும் ஐசிசி தற்போது புதிதாக திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி 2024 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் ஐசிசி டி20 சம்பியன்ஸ் தொடரை நடத்துமாறு யோசித்து உள்ளதாம். மேலும் டி20 உலகக் கோப்பையை 2026 மற்றும் 2030 ஆம் ஆண்டுகளில் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. அதேபோன்று 50 ஓவர் உலகக் கோப்பையை 2027 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் நடத்துகிறது. இது மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அட்டவணையும் தயார் செய்துவருகிறது.
இதனால் கூடுதலாக பெரிய தொடர்களை நடத்த ஐசிசி எடுத்திருக்கும் இந்த முடிவினை இந்திய கிரிக்கெட் வாரியம் நேரடியாக எதிர்க்க உள்ளது. இது போன்ற பெரிய தொடர்களை ஐசிசி நடத்துவதால் பிசிசிஐ கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் ஐசிசி நடத்த இருக்கும் இந்த பெரிய தொடர்களால் பிசிசிஐ-யால் இருநாட்டு தொடர்களை அதிக அளவில் நடத்த வாய்ப்பு இல்லை என்றும் அதனால் இருநாட்டு தொடர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது.

இதனால் அடுத்த மாதம் ஐசிசி நடத்தவிருக்கும் கூட்டத்தில் கங்குலி தலைமையிலான பிசிசிஐ குழு டி20 சாம்பியன்ஷிப் மற்றும் ஐ.சி.சி அட்டவணை குறித்தும் நேரடியாக எதிர்ப்பை வெளியிட்டு தங்களது கருத்துக்களையும் கூற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



