இதுமட்டும் நடந்தா இங்கிலாந்து டூரையும் மறந்துடுங்க – வீரர்களை கடுமையாக எச்சரித்த பி.சி.சி.ஐ

Ind-lose
- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக ஜூன் மாதம் 18ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி துவங்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. ஆகையால் இந்த 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் நீண்ட நாட்கள் நடைபெற வேண்டி உள்ளதால் இந்திய அணி மும்பையில் இருந்து இந்த மாத இறுதியில் இங்கிலாந்துக்கு செல்லும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து செல்வதற்கு முன் இந்திய வீரர்கள் அனைவரும் மும்பைக்கு வந்து தனிமைப் படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையின் முடிவில் யாருக்கேனும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானால் அவர்கள் இங்கிலாந்து தொடரை மறந்துவிட வேண்டியதுதான் என கிரிக்கெட் வாரியம் வீரர்களை கடுமையாக எச்சரித்து உள்ளது.

மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட வீரர் இந்திய அணியில் இணையவே முடியாது என்றும் அதனால் அந்த டெஸ்ட் தொடரை அவர்கள் முற்றிலுமாக இழப்பார்கள் என்றும் உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி பாதுகாக்கப்பட்ட பயோ பபுள் விதிமுறைகளை வீரர்கள் இம்மாத இறுதியில் இருந்து இங்கிலாந்து தொடர் முடியும் வரை பின்பற்ற வேண்டும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

IND

இந்திய அணி ஜூன் 2-ஆம் தேதியன்று இங்கிலாந்துக்கு புறப்படும் என்றும் அதற்கு முன்னதாக எட்டு நாட்கள் மும்பையில் இந்திய வீரர்கள் அனைவரும் பயோ பபுள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்த எட்டு நாட்களில் வீரர்களுக்கு பலமுறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் இறுதியில் பாதிப்பு உறுதியானால் அந்த வீரரை அணி நிர்வாகம் இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லாது எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

Prithi-Ashwin

அதுமட்டுமின்றி இடைப்பட்ட காலத்திலும் இந்திய அணி வீரர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வீரர்களின் குடும்பத்தினரை இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் அவர்களும் பயோ பபுள் வளையத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் தெளிவாக பிசிசிஐ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement