ஜவ்வா இழுக்காம சீக்கிரம் பதிலை சொல்லுங்க. ஐ.சி.சி யின் பதிலுக்காக காத்திருக்கும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ

BCCI
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் சில மாதங்களில் ஐபிஎல் தொடரை நடத்திவிடலாம் என்று யோசித்து திட்டமிட்டு வருகிறது பிசிசிஐ. ஆனால் அதற்கு உலக கோப்பை டி20 தொடர் பெரும் தடையாக இருக்கிறது.

Ipl cup

- Advertisement -

அக்டோபர் நவம்பர் மாதங்களில் உலக கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய நாட்டில் அனைத்து எல்லைகளும் அடுத்த ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அந்த அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே டி20 தொடர் நடப்பதில் சிக்குல் வரும் நிலையில் இது குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் ஐசிசி காலம் தாழ்த்தி வருகிறது

அப்படி இந்த காலகட்டத்தில் டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்படவில்லை என்றால் அந்த நேரத்தை பயன்படுத்தி ஐபிஎல் தொடரை நடத்த விடலாம் என்று பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை ஐசிசி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை .சொல்லப்போனால் மொத்தம் 3 வழிகள் தான் இருக்கிறது.

1. வீரர்களையும் ரசிகர்களையும் 14 நாட்கள் தனிமைபடுத்திவிட்டு மைதானத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

- Advertisement -

2. இரண்டாவது வழி காலி மைதானத்தில் போட்டியை நடத்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி காசு பார்க்கவேண்டும்.

3.மூன்றாவது வழி அடுத்த வருடத்திற்கு டி20 உலக கோப்பை தொடரை தள்ளிவைக்க வேண்டும் இவ்வளவுதான்

Cup

ஆனால் எந்த ஒரு முடிவையும் தற்போது வரை ஐசிசி அறிவிக்கவில்லை. இதனால் பிசிசிஐ கடுப்பில் உள்ளது. ஐபிஎல் தொடரை நடத்த அந்த காலத்தை கொடுங்கள் என்ற நிலையில் கேட்டுக்கொண்டிருக்கிறது பிசிசிஐ. இந்தக் கட்டத்தில்தான் ஐசிசி இன்று கூடி இதற்கான அனைத்து முடிவுகளையும் அறிவிக்க இருக்கிறது. இன்று மாலைக்குள் ஐபிஎல் தொடர் இந்த வருடம் நடக்குமா அல்லது டி20 உலகக் கோப்பை தொடர் இந்த வருடம் நடக்குமா என்பது தெரிந்துவிடும்.

Advertisement