இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக இவரே நியமிக்கப்பட அதிக வாய்ப்பு – வெளியான தகவல்

BCCI
- Advertisement -

இந்திய அணியின் தற்போதைய முதன்மை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி ரவிசாஸ்திரி தான் மீண்டும் பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என்று தெரிகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக பயிற்சியாளராக பதவியேற்ற ரவிசாஸ்திரி 2019 வரை நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு கேப்டன் கோலியின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் பயிற்சியாளராக தனது பொறுப்பை தொடர்ந்த ரவிசாஸ்திரி தற்போதைய டி20 உலக கோப்பை தொடர் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

Shastri

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடரோடு முதன்மை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அவருடைய உதவியாளர்களான பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் பதவி விலகுகின்றனர். இதில் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மட்டும் இந்திய அணியுடன் தொடர விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருவதாக வெளியான தகவலின் படி :

ஏற்கனவே புதிய பயிற்சியாளருக்கான தேடல் தற்போது நடைபெற்று வருவதாகவும், டி20 உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு புதிய பயிற்சியாளர் குறித்து அதிகாரபூர்வ முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி புதிய பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பம் பெறப்படும் என்றும் அதில் ரவி சாஸ்திரிக்கு மாற்றாக இந்திய அணியின் முன்னாள் வீரர்களான அனில் கும்ப்ளே அல்லது விவிஎஸ் லட்சுமணன் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Kumble 1

ஏற்கனவே 2016 – 17 ஆம் ஆண்டில் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே பதவியேற்ற ஓராண்டிற்குள் விராட் கோலியுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக பதவி விலகினார். அதேவேளையில் லட்சுமணன் இந்திய பயிற்சியாளராக மாறுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். இதன்காரணமாக நிச்சயம் கும்ப்ளே அல்லது லட்சுமணன் ஆகிய இருவரில் ஒருவரே பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Laxman

வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்பதெல்லாம் இரண்டாம் விருப்பம்தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்ப்ளே மற்றும் லட்சுமணன் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் கொண்டவர்கள் அதே நேரத்தில் பயிற்சியாளருக்கும் அவர்கள் பொருந்துவதால் நிச்சயம் அவர்கள் இருவரில் ஒருவரே பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக பி.சி.சி.ஐ வட்டாரங்கள் வாயிலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement