இனிமேல் இந்த விடயம் குறித்து கேப்டன் கோலி வாய் திறக்கவே கூடாது – விராட் கோலிக்கு நிபந்தனை விதித்த பி.சி.சி.ஐ

Kohli
- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் உலகக் கோப்பைத் தொடரோடு முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து வரவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்காக அவருக்கு 45 நாட்கள் மேலும் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.

ravi

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 30ஆம் தேதி வரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டு .

இந்நிலையில் பிசிசிஐ தரப்பில் இருந்து பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த புதிய பயிற்சியாளர் தேர்ந்தெடுப்பது குறித்து கோலி வாய் திறக்கக்கூடாது என்று பிசிசிஐ நிபந்தனை செய்துள்ளது. ஏனெனில் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட கோலியின் பங்கு அதிகமாக இருந்தது. இனிமேல் அதனைப் போன்று இல்லாமல் உச்சநீதிமன்றம் நியமித்த ஆலோசனைக் குழுவின் அடிப்படையில் கபில்தேவ் தலைமையில் யார் தேர்வு செய்யப்படுகிறார் அவரை புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ravi koli 2

கும்ப்ளே அணியின் பயிற்சியாளராக இருக்கும் போது அவருடன் இருந்த உறவு சுமூகமாக இல்லை என்பதால் ரவி சாஸ்திரி இந்திய அணிக்கு பயிற்சியாளராக மாற்றியதற்கு கோலியின் பங்கு பெரும் அளவில் இருந்தது. அதனால் இனிமேல் கேப்டன் ஆலோசனை வழங்குவதை பிசிசிஐ விரும்பவில்லை நேரடியாக தேர்வுக்குழு நிர்வாகமே இதனை தேர்வு செய்யட்டும் என்பது போல தனது கருத்தினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement