மூளையில்லாமல் அட்டவணை தயார் செய்வீர்களா? இந்தியா-பாகிஸ்தான் போட்டி மாற்ற வேண்டும்! பிசிசிஐ கோபம்

ஆசிய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்தாண்டிருக்கான ஆசிய கோப்பை போட்டிகளின் அட்டைவனைகள் இறுதினதற்கு முன்னர் வெளியாகின. இந்த போட்டிக்கான அட்டைவனைகளை பார்த்து பிசிசிஐ நிர்வாகம் தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

India v Pakistan

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் ஆசிய கோப்பை போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அரபு நாடுகளில் துவங்கவுள்ளது. இதில் இந்த 4 அணிகளும் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில் யுஏஇ, நேபால், சிங்கப்பூர், ஹாங் காங், ஓமன், மலேசியா ஆகிய நாடுகளுக்கு தகுதி போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதில் இரு பிரிவுகள் பிரிக்கப்பட்டு 6 தகுதி சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.தகுதி சுற்றில் தகுதி பெரும் அணிகள் மட்டுமே காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெரும். சமீபத்தில் இந்த போட்டிக்கான அட்டைவனை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி செப்டம்பர் 18 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், 19 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் விளையாட உள்ளது.

அடுத்தடுத்து இரண்டு நாட்கள் இந்திய அணி விளையாட உள்ளதால், இந்திய அணி வீரர்களுக்கு போதிய ஒய்வு கிடைக்கப்பெறாமல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் சோர்வடைந்து விடுவார்கள் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இந்த அட்டைவனை மிகவும் மூளை இல்லாமல் இருகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது, இதற்கு நிச்சயம் ஒரு மாற்றம் வேண்டும் என்று பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

icc

2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டிகளின் அட்டைவனை

குரூப் ஏ: இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குவாலிபைர்

குரூப் பி: இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான்

ஆசியா கோப்பை அட்டவணை:

குரூப் போட்டிகள்:

* செப்டம்பர் 15 – வங்கதேசம் vs இலங்கை (துபாய்)

* செப்டம்பர் 16 – குவாலிபைர் vs பாகிஸ்தான் (துபாய்)

* செப்டம்பர் 17 – ஆப்கானிஸ்தான் vs இலங்கை (அபுதாபி)

* செப்டம்பர் 18 – குவாலிபைர் vs இந்தியா (துபாய்)

* செப்டம்பர் 19 – பாகிஸ்தான் vs இந்தியா (துபாய்)

* செப்டம்பர் 20 – ஆப்கானிஸ்தான் vs வங்கதேசம் (அபுதாபி)

சூப்பர் நான்கு:

* செப்டம்பர் 21 – குரூப் A முதலிடம் Vs குரூப் B இரண்டாம் (துபாய்)

* செப்டம்பர் 21 – குரூப் B முதலிடம் vs குரூப் A இரண்டாம் (அபுதாபி)

* செப்டம்பர் 23 – குரூப் A முதலிடம் vs குரூப் A இரண்டாம் (துபாய்)

* செப்டம்பர் 23 – குரூப் B முதலிடம் Vs குரூப் B இரண்டாம் (அபுதாபி)

* செப்டம்பர் 25 – குரூப் A முதலிடம் Vs குரூப் B முதலிடம் (துபாய்)

* செப்டம்பர் 26– குரூப் A இரண்டாம் இடம் Vs குரூப் B இரண்டாம் (அபுதாபி)

* இறுதிபோட்டி – செப்டம்பர் 28 (துபாய்) .