தோனியின் இந்த வார்த்தைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் – பி.சி.சி.ஐ

Dhoni-1

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி. முன்னாள் கேப்டனான இவர் இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்றதும் இந்த தொடருடன் ஓய்வு பெறுவார் என்று பலரும் கூறி வந்தனர். மேலும் அவரது ஆட்டம் குறித்த பல சர்ச்சைகள் இந்த உலக கோப்பை தொடரில் எழுந்தன. இதனால் தோனி கோப்பைத் தொடர் முடிந்து ஓய்வு என்று அறிவிப்பார் என்றும் பலரும் கூறி வந்தனர்.

dhoni

இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி ஆற்றிய பங்களிப்பு மிகவும் அதிகம். அதனால் அவரது ஓய்வு முடிவை அவரே தான் எடுக்க வேண்டும் என்று சிலரும், இன்னும் சிறப்பாக ஆடி வருகிறார் அவர் ஏன் ஓய்வு பெறவேண்டும் ? ஓய்வு பெற அவசியம் இல்லை என்றும் சிலரும் கூறி வருகின்றனர். முன்னாள் வீரரான சச்சின் கங்குலி போன்ற வீரர்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான அதே நிலை இப்போது தோனிக்கும் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் தோனி ஓய்வை அறிவிப்பாரா ? என்பது இன்னும் சில நாட்களில் தெரியும். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான அணித்தேர்வு வரும் 17,18 ஆம் தேதி மும்பையில் நடக்கிறது. இதில் தோனிக்கு இடம் கிடைக்காது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dhoni 1

இந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடரில் கோலி, பும்ரா, பாண்டியா, ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். ஓய்வு அளிக்கப்பட்ட வீரர்கள் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார்கள். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் தோனி தேர்வு பெறுவதில் சிக்கல் இருக்கிறது.

- Advertisement -

Dhoni

மேலும் உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் தோற்றதில் இருந்து இந்திய அணி இன்னும் மீண்டு வரவில்லை. வீரர்கள் இன்னும் நாட்டுக்கு கூட திரும்பவில்லை. அதற்குள் தோனி ஓய்வு குறித்து கேட்டால் என்ன சொல்வது தோனியே வந்து ஓய்வு குறித்து கூறினால் மட்டுமே எங்களால் எதையும் உறுதியாக சொல்ல முடியும். அவரின் வார்த்தைகள் காத்திருக்கிறோம் அவர் ஓய்வு குறித்து எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஒத்துழைக்கும் என்று அந்த நிர்வாகி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement