ரத்தான 5 ஆவது டெஸ்ட் போட்டி எப்போது நடைபெறும் – பி.சி.சி.ஐ கொடுத்த விளக்கம்

Jay
Advertisement

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் இடையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறவிருந்த 5வது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் அணியின் பிசியோ நிதின் பட்டேலுக்கும் கொரோனா உறுதியானது.

indvseng

இதன் காரணமாக 5வது போட்டி வீரர்களின் பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மான்செஸ்டர் நகரில் நடைபெற இருந்த இந்த இறுதிப்போட்டியானது பிசிசிஐ மற்றும் இ.சி.பி ஆகிய இரண்டு நிர்வாகமும் இணைந்து போட்டியை ரத்து செய்ததாக அறிவித்தது.

- Advertisement -

மேலும் இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறுகையில் : இந்த டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு நாங்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். ஆனால் இறுதியில் இருநாட்டு நிர்வாகங்களும் இணைந்தே இந்த போட்டியை ரத்து செய்துள்ளோம்.

jay shah

இருப்பினும் இந்த போட்டியை மீண்டும் நடத்த முன்வந்துள்ளதாகவும் ஆனால் இந்த போட்டி மீண்டும் எப்போது நடைபெறும் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும் பிசிசிஐ சார்பில் ஜெய்ஷா அறிவித்துள்ளார். வீரர்களின் பாதுகாப்பு கருதியும், ஒருபோதும் வீரர்களின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்ய கூடாது என்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

IND

அதுமட்டுமின்றி ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு எங்களது வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக ரத்து செய்யப்பட்ட இந்த 5வது போட்டி மீண்டும் நடைபெறும் வாய்ப்பு உள்ளதாகவும் ஆனால் அது எப்போது நடைபெறும் ? என்று இன்னும் உறுதியாகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement