ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் டெட் லைன் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ள பி.சி.சி.ஐ – விவரம் இதோ

Rohith

இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தற்போது காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த ரோஹித் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்தார். இதன் காரணமாக கடந்த 4 போட்டிகளாக அந்த அணிக்கு வெளியே இருந்து வருகிறார். மேலும் கெரோன் பொல்லார்ட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.

rohith

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான மூன்று வடிவ அணியில் ஒன்றில் கூட ரோஹித் சர்மாவின் பெயர் இடம் பெறவில்லை. ஏனெனில் அவருக்கு காலின் தொடை தசைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ரோகித் சர்மாவின் உடல்நிலை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மருத்துவ குழுவினர் நாளை பரிசோதனை செய்ய இருக்கிறார்கள். இந்த பரிசோதனைக்கு பிறகு தான் இவரால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாட முடியுமா ? என்பது குறித்து தெரிவிக்கப்படும்.

rohith 1

ஒருவேளை அவரது உடல் தகுதி சொல்லத் தகுந்த வகையில் இருந்தால் கண்டிப்பாக அவருக்கு இடம் கிடைக்கும் அப்படி இல்லை என்றால் கண்டிப்பாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நிரந்தரமாக ரோஹித் சர்மா நீக்கப்படுவார். அதே நேரத்தில் சில தினங்களுக்கு முன்னர் ரோஹித் சர்மா பயிற்சி செய்வது போன்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.

- Advertisement -

Rohith

ஆனால் அவருக்கு ஏற்பட்டு இருப்பது தொடைப்பகுதியில் உள்ள தசைநார்கள் மூலம் ஏற்பட்ட காயம் இந்த காயம் ஏற்பட்டால் ஓடமுடியாது, ஓடுவதற்கும் நின்றுகொண்டு பேட்டிங் பிடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இதனை வைத்துதான் சமூகவலைதளத்தில் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.