கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்திய அணி அடைந்த இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்த வேளையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ மத்தியிலும் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
இந்திய வீரர்களின் குடும்பத்தாருக்கு பர்மிஷன் வழங்கிய பி.சி.சி.ஐ :
இதன் காரணமாக இந்திய அணி வீரர்களுக்கு 10 புதிய கட்டுப்பாடுகளை பி.சி.சி.ஐ விதித்திருந்தது. அந்த வகையில் இனி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது இந்திய வீரர்கள் தங்களது குடும்பத்தினரையோ, உறவினர்களையோ அழைத்து செல்லக்கூடாது என்று அறிவித்திருந்தது.
மேலும் 45 நாட்களுக்கு மேற்பட்ட தொடருக்காக மட்டும்தான் இந்திய அணி வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்லலாம் என்றும் அதுவும் இரண்டு வாரங்கள் மட்டும் தான் அவர்களை உடன் இருக்க அனுமதி வழங்குவோம் என்றும் அதன் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் வீரர்களுடன் இருக்கக் கூடாது என்று புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்தியிருந்தது. அந்த வகையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி வீரர்களுடன் அவர்கள் குடும்பத்தார் பயணிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது துபாய்க்கு சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் அங்கு பயிற்சி எடுத்து வரும் வேளையில் சில மூத்த வீரர்கள் தங்களது குடும்பத்தினர் தங்களுடன் இருக்க வேண்டும் என்றும் அதற்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்று வேண்டுகோளை முன் வைத்திருந்தனர். இதனை பரிசீளித்த பிசிசிஐ ஒரு கன்டிஷனுடன் இந்திய வீரர்களுக்கு சில சலுகையை வழங்கி உள்ளது.
அந்த வகையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை ஏதாவது ஒரு போட்டிக்கு மட்டும் அழைத்துச் செல்லலாம் என்றும் அந்த ஒரு போட்டியோடு அவர்கள் திரும்பி விட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
இதையும் படிங்க : விராட் கோலியை பத்தி சந்தேகமே வேணாம்.. சாம்பியன்ஸ் டிராபியில் சம்பவம் காத்திருக்கு – சிறுவயது கோச் அதிரடி
அதுமட்டும் இன்றி குடும்ப உறுப்பினர்கள் எந்த போட்டிக்கு முன்பாக வர இருக்கிறார்கள் என்பதை முறையாக தெரிவித்து அனுமதி பெற்ற பிறகே அங்கு செல்ல வேண்டும் என்றும் அப்படி உரிய அனுமதியுடன் சென்றால் ஒருநாள் வீரர்களுடன் இருக்க குடும்பத்தாருக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒருநாள் தங்களது குடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



