இன்டர்நெட், டிவி மட்டும் இல்ல. இனிமே இதன் வழியாகவும் கிரிக்கெட் பத்தி தெரிஞ்சிக்கலாம் – பி.சி.சி.ஐ பலே பிளான்

crick-BCCI
- Advertisement -

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

ind vs sa

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி 15ஆம் தேதி தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிசிசிஐ தனது திட்டம் குறித்த தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி இனிமேல் இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகள், ரஞ்சி போட்டிகள் சர்வதேச போட்டிகள் போன்ற அனைத்திற்கும் டிவி உரிமை மட்டுமில்லாமல் வானொலி உரிமமும் அளித்துள்ளது.

அதன்படி ஆல் இந்தியா ரேடியோ (AIR) நிறுவனத்துடன் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளது பிசிசிஐ. ஏனெனில் தற்போதெல்லாம் பலர் வெளியில் செல்லும்போது மற்றும் பயணிக்கும்போது FM கேட்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். எனவே கிரிக்கெட் செய்திகளையும் கிரிகெட் கமெண்டரி களையும் நேரடியாக FM மூலம் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து பகிர உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

india

அதன்படி இனிமேல் டிவி மற்றும் இன்டர்நெட் அல்லாமல் ரேடியோ மூலம் கிரிக்கெட் கமென்டரிகளை முழு ஒளிபரப்பினை கேட்டு மகிழலாம் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement