ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இன்று துவங்கி விளையாடி வருகிறது. இன்று காலை 8:30 மணிக்கு அடிலெய்டு மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பகல் இரவு டெஸ்ட் போட்டி என்பதால் முதலில் பேட்டிங் செய்தால் மைதானம் சாதகமாக அமையும் என்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய வீரர்களை நேற்று தேர்வு செய்த அறிவித்த பிசிசிஐயின் தகவலில் இருக்கும் தவறுகளை கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதில் முதல் கேள்வியாக இந்த டெஸ்ட் போட்டியில் ஏன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ராகுலை அணியில் சேர்க்க வில்லை என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஏனெனில் கோலி, ரஹானே, புஜாரா போன்ற பெரிய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்காத நிலையில் பின்வரிசையில் ராகுல் இந்திய அணிக்கு நிச்சயம் ரன்களை சேர்ப்பார்.
அதுமட்டுமின்றி கடந்த ஐபிஎல் தொடர் அடுத்து ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 தொடர் என அசத்தலான பார்மில் இருக்கும் இவர் இந்திய அணியின் பின்வரிசையில் இறங்கினால் இன்னிங்சை நிலைநிறுத்தி ஆடும் தன்மை கொண்டவர் எனவே ராகுல் கட்டாயம் இந்திய அணிக்கு தேர்வு பெற வேண்டிய ஒரு நபர். அவரை ஏன் தேர்வு செய்யவில்லை ?என்று கேட்டுள்ளனர்.
அதன் பிறகு மற்றொரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான பண்ட் ஆஸ்திரேலியாவில் கடந்த முறை நடைபெற்ற டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளிலும் விளையாடிய அனுபவம் கொண்டவர். அதுமட்டுமின்றி சிட்னியில் 159 ரன்களை அவர் குவித்து இருந்தார். அதேபோல அண்மையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் 73 பந்துகளில் 103 ரன்களை குவித்திருந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பான சராசரி வைத்துள்ளார். அதனால் சஹாவிற்கு பதிலாக அவரை சேர்த்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
அதே போன்று மற்றொரு வீரராக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான சுப்மன் கில் அணியில் இடம்பெற்றிருக்க வேண்டிய வீரராக பார்க்கப்படுகிறார். ஏனெனில் இன்றைய போட்டியிலும் பிரித்வி ஷா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஆனால் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பிரித்வி ஷா விட சிறப்பான ஆட்டத்தை கில் வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு பதில் சுப்மன் கில்லுக்கு இடம் கொடுத்து இருக்கலாம் என்றும் தங்களது கருத்துகளை ரசிகர்கள் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் அதனை பதிவிடலாம் நண்பர்களே.