10 ஆண்டுகளாக இந்திய அணியில் நீடித்து வந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

BCCCI
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்கள் இருந்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி ஐசிசி கோப்பையை கைப்பற்றாமல் இருந்து வந்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் ஒருவழியாக நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையின் மூலம் அந்த ஏக்கத்தை அவர்கள் தனித்துள்ள வேளையில் தற்போது இந்திய அணி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றுள்ள வேளையில் தற்போது இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் அணித்தேர்வு மிகச் சிறப்பாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு பிரச்சனைக்கும் தற்போது பிசிசிஐ முடிவு கண்டுள்ளதாக தெரிகிறது.

அந்த வகையில் இந்திய அணியில் ஒரு காலத்தில் சேவாக், சச்சின், கங்குலி, யுவராஜ் மற்றும் ரெய்னா போன்ற வீரர்கள் திறமையான பேட்ஸ்மேன்கள் என்பது மட்டுமின்றி பகுதிநேர பந்துவீச்சாளராகவும் செயல்பட்டு வந்தனர். அதன் காரணமாக கேப்டனால் அவர்களை சரியாக பயன்படுத்தி போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது.

- Advertisement -

ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் வீரர்களுக்கு பந்துவீச தெரியாததால் பெரிய அளவில் அவர்களால் போட்டியில் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது ஜிம்பாப்வே அணிக்கெதிராக தேர்வு செய்யப்பட்ட அணியில் பவுலிங் தெரிந்த வீரர்களான அபிஷேக்சர்மா, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களை இணைத்துள்ளதால் ஒரு கேப்டன் அவரிடம் இருந்து ஒரு சில ஓவர்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இதையும் படிங்க : டிஎன்பிஎல் 2024 : கடைசி ஓவரில் 6, 6, 6.. முருகன் அஸ்வின் மாஸ் ஃபினிஷிங்.. சேலத்தை வீழ்த்திய மதுரை

இதனால் பவுலெங்கில் நிறைய ஆப்ஷனும் இருக்கும். இதுபோன்றே இனிவரும் அனைத்து தொடர்களிலும் அணித்தேர்வு இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்பதனால் பிசிசிஐ டாப் ஆர்டரில் பவுலிங் தெரிந்த வீரர்களையே அதிகளவு தேர்வு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

Advertisement