ஆஸ்திரேலிய தொடர் முடிவடைந்ததும் இங்கிலாந்து தொடருக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ – விவரம் இதோ

BCCI

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. தற்போது மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்தது. இன்றுடன் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடிகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது. இதன் பின் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.

pant

இந்நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஜனவரியில் நாடு திரும்பும் இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி அகமதாபாத் மைதானத்திலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 23ம் தேதி புனே மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருவதால் கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவதற்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து பல்வேறு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த இங்கிலாந்து சுற்றுபயணத்தை பார்வையாளர்களுடன் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் பிசிசிஐ பார்வையாளர்களுடன் நடத்தினால் வீரர்களுக்கு பாதுகாப்பு குறைவாக இருக்கும் என்று கூறியுள்ளது. வீரர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என்று பிசிசிஐ கூறியுள்ளது. வீரர்களின் பாதுகாப்பு கறுதி இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத் தொடரை பார்வையாளர்களின்றி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

siraj

ஏற்கனவே இந்திய வீரர்கள் யூ.ஏ.ஈ மற்றும் ஆஸ்திரேலியாவில் கடுமையான குரோன்டையனில் இருந்துள்ளனர். இந்தியாவிலும் இதுபோன்ற கட்டுபாடுகளில் வீரர்கள் இருந்தால் அது சரியாக இருக்காது. எனவே இந்தியாவில் நடைபெறும் இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்திய ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.