NIKE நிறுவனத்துடன் இருந்த கிட் ஸ்பான்சர்ஷிப்பை முடித்துக்கொண்ட பி.சி.சி.ஐ – அடுத்த ஸ்பான்சர் யார் தெரியுமா ?

BCCI
- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை காலம் காலமாக அதாவது ஒரு குறிப்பிட்ட அளவு நீண்டகாலம் ஒரே மாதிரியான சீருடைகளை அணிவது வழக்கம். ஆனால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகளை பார்த்தால் ஒவ்வொரு தொடருக்கும் வித்தியாச வித்தியாசமான உடைகளை அணிந்து விளையாடுவார்கள்.

Ind vs Aus

குறிப்பாக அவர்களது வர்த்தக கொள்கைப்படி ஒவ்வொரு தொடருக்கும் வித்தியாச வித்தியாசமாக ஸ்பான்சர்களை மாற்றிக்கொள்ளலாம். இதன் காரணமாக தொடர்ந்து அவர்களுக்கு புதிது புதிதாக வடிவமைக்கப்பட்ட உடைகள் கொடுக்கப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை 2016 ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை ஸ்போர்ட்ஸ் உடைகளை வடிவமைக்க நைக் நிறுவனம் கிட் ஸ்பான்சர் செய்து வந்தது.

- Advertisement -

அதற்கு முன்னதாக ஒரு நிறுவனமும் அதற்கு முன்னதாக சஹாரா என பல நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு ஸ்பான்சர் செய்து வந்தனர். ஆனாலும், நீலநிறம் எப்போதும் மாறியதில்லை. தொடர்ந்து ஒரே மாதிரியான நீல நிற வடிவிலான உடைகள்தான் கொடுக்கப்பட்டு வந்தத இந்நிலையில் நைக் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்துள்ளதால் (MPL) எம்பிஎல் நிறுவனம் கிட் ஸ்பான்சராக பிசிசிஐ உடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

mpl

இந்திய வீரர்களின் ஜெர்சி மற்றும் கிரிக்கெட் கிட் ஆகியவற்றை தயாரித்து கொடுக்க எம்பிஎல் நிறுவனம் ஒப்புக்கொண்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான மூன்று ஆண்டு காலத்திற்கு இந்த நிறுவனம் இந்திய கிரிக்கெட் ஆடவர், மகளிர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி ஆகிய அனைவருக்கும் ஸ்பான்சர் ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்திய அணி புதிதாக எம்பிஎல் நிறுவனத்தின் மூலம் வடிவமைத்துள்ள ரெட்ரோ ஜெஸ்ஸியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பயன்படுத்த போகிறது இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அந்த ரெட்ரோ ஜெர்சி புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement