இந்தியா திரும்ப வாய்ப்பிருந்தும் வேண்டாம் என்று மறுத்த சிராஜ் – பி.சி.சி.ஐ வெளியிட்ட தகவல்

Siraj
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமத் சிராஜ் நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதின் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்தார். மேலும் தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடன் இவரும் பயணித்துள்ளார்.

Siraj 2

- Advertisement -

இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அன்று அவரது தந்தை முகமது கவுஸ் (வயது 53) நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக காலமானார். அந்த செய்தி அவரை எட்டியதும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்த தாகக் கூறப்படுகிறது. மேலும் தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இருக்கும் சிராஜ் கொரோனா விதிமுறை கட்டுப்பாட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் இந்த செய்தியை கேட்டு இடிந்து போய் உள்ளார்.

தனது தந்தையை இழந்து சிராஜ் அவரது இழப்பு ஈடுகட்ட முடியாத ஒன்று என்ற என்று தனது சோகத்தை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் அவருக்கு ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளியானது.

Siraj 1

இந்நிலையில் தற்போது தந்தையை இழந்த சிராஜ் இந்தியா திரும்ப வாய்ப்பு இருந்தும் அணியோடு இருக்க விரும்புவதாக கூறிவிட்டதாக பிசிசிஐ தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட தகவலில் : “தந்தை காலமானதும் நாங்கள் அவருடன் கலந்துரையாடினோம். அப்போது இந்த துயரமான நேரத்தில் அவர் இந்தியா திரும்பவும் குடும்பத்தோடு எழுப்பவும் நாங்கள் வாய்ப்பு அளித்தோம்”.

siraj

ஆனால் அவர் இந்திய அணியோடு இருக்கவே தற்போது விரும்புவதாகவும், தனது நாட்டிற்காக விளையாட போவதாகவும் கூறி விட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அணிக்காக விளையாடியவர் 9 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement