ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அணியின் கேப்டனாக விராட் கோலியும், துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் செயல்படுகின்றனர். அதே போன்று முக்கிய சேர்க்கையாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய அணியின் ஆலோசகராக இந்த தொடரில் செயல்பட உள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்ற தோனி இந்திய அணியின் ஆலோசகராக தான் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தனது விருப்பத்தை தெரிவித்து இருந்த காரணத்தினால் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி அணியில் இணைந்துள்ளார்.
இந்த விடயம் ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வழிகாட்டியாக தோனி ஏன் அணியில் அழைக்கப்பட்டார் ? என்பது குறித்த விளக்கத்தையும் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ;

இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்வதில் தோனி மட்டும் தான் சிறந்தவர். அவரை விட யாராலும் திறம்பட இந்த வேலையை செய்ய முடியாது. அவர் இந்திய அணியில் இருப்பது இந்திய வீரர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் என்கிற காரணத்தினாலேயே அவரை அணியின் ஆலோசகராக இணைத்துள்ளோம் என்று ஜெய் ஷா விரும்பினார்.

அதன்படி தோனிக்கு அவருடைய விருப்பத்தை கேட்கும் பட்சத்தில் தோனியும் அதனை விரும்பி ஏற்றுக் கொண்டதால் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவர் தனது கருத்தினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



