கொரோனா வைரஸ் பாதிப்பு. ஐ.பி.எல் தொடர் நிறுத்தம். தங்களது பதிலை அதிரடியாக அறிவித்த – பி.சி.சி.ஐ

BCCI
- Advertisement -

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தும் ஒரு பெரிய பாதிப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தற்போது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை இந்தியாவிலும் இதுவரை 44 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Ipl cup

- Advertisement -

எனவே இந்த வைரஸ் பாதிப்பினால் தவிர்க்க இந்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. மேலும் மக்கள் பொது இடங்களில் கூடும்போது இருமல், தும்மல் ஆகியவை ஏற்படும்போது தகுந்த கட்டுப்பாட்டுடன் நடக்கவும் சில அறிவுரைகளை அரசாங்கம் சார்பில் வழங்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் முன்னெச்சரிக்கை விடும் விதமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் போட்டி தள்ளிப் போகலாம் என மகாராஷ்டிர மாநில மந்திரி தெரிவித்திருந்தார். இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வெளியான தகவலின்படி நாங்கள் சூழ்நிலையை நன்றாக கவனித்து வருகிறோம். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஆனால் ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்கும் முடிவுகள் குறித்து எந்த ஒரு நடவடிக்கையும், எந்த ஒரு முடிவையும் நாங்கள் இதுவரை எடுக்கவில்லை.

- Advertisement -

எல்லா விஷயங்களும் எங்களுடைய மனதில் உள்ளது. தற்போது வரை ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை தற்போது வரை எங்களால் என்ன முடியுமோ அதுவரை நாங்கள் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் பிசிசிஐ கூடுதலாக மருத்துவ குழுவை ஒவ்வொரு மைதானத்திற்கும் அனுப்பி வைக்கும் என்றும் பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ground

மேலும் திட்டமிட்டபடி இந்த ஐபிஎல் தொடர் நடைபெறும் என்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மருத்துவ ரீதியாக எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் வீரர்கள் ஆகியோரும் நலனுக்காகவும் சரி அனைத்து மைதானங்களுக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement