கொரோனா முடிஞ்சி இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இதுதான் – பி.சி.சி.ஐ போட்ட பலே திட்டம்

BCCI
- Advertisement -

கொரோனா வைரஸ் முடிந்தவுடன் இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடராக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருக்கும், முன்னதாக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மட்டுமே திட்டம் தீட்டப்பட்டிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்ட பொருளாதார இழப்பு மற்றும் அடுத்த தொடர்கள் நிச்சயம் இல்லாமை போன்றவற்றை வைத்து இன்னும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இந்த சுற்றுப்பயணத்தில் சேர்த்துக்கொள்ளலாம் என்று இரு கிரிக்கெட் வாரியங்களும் திட்டமிட்டு வருகிறது.

- Advertisement -

4 டெஸ்ட் போட்டிகளை 5 டெஸ்ட் போட்டிகள் ஆக மாற்றலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே ஆலோசனை தெரிவித்திருந்தது. மேலும், இந்த தொடர் நடக்கவில்லை என்றால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வருத்தத்திலிருந்து வருகிறது. இதனால் திட்டமிட்டபடி இந்த தொடரை நடத்தியே ஆக வேண்டும் என்றும் இருநாட்டு நிர்வாகங்களும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடர் நடக்க இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். வேறு வழியே இல்லை. அதனால் இரண்டு வாரங்கள் வீரர்களை தனிமைப் படுத்தினால் அதில் பெரிய ஆட்சேபனை இருக்காது. இது அனைத்து விதமான போட்டிகளுக்கும் பின்பற்றப்படுவது வழக்கம்.

இந்த லாக் டவுன் முடிந்த பின்னர் என்னென்ன விதிகள் பின்பற்றப் படுகிறது என்பதைப் பொறுத்தே இது அமையும். முதலில் டெஸ்ட் தொடரை முடிவு செய்துவிடலாம். அதன் பின்னர் 5 டெஸ்ட் போட்டிகளைப் பற்றி பேசலாம், அல்லது கூடுதலாக 2 ஒருநாள் போட்டிகள் அல்லது 2 டி20 போட்டிகள் நடத்தனால் கூட சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார் அருண் துமல்

- Advertisement -

ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்பதற்காக தனியாக ஹோட்டல் அறைகள் கட்டப்பட தீர்மானித்துள்ளதாக ஆஸ்திரேலிய நிர்வாகம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் திட்டமிட்டபடி இந்த தொடரை நடத்த என்ன முடிவுகளை கையாள வேண்டும் என்றும் புதுப்புது யோசனைகளை கையாண்டு வருகின்றனர்.

paine 2

ஏற்கனவே காலி மைதானங்களில் போட்டியை நடத்தலாம் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர். ஆனால் அந்த முடிவிற்கு பலர் தங்களது ஆதரவினையும் சிலர் தங்களது எதிர்பினையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement