இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை முடித்த கையோடு தற்போது நாடு திரும்பியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதன் பின்னர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர்களிலும் அடுத்தடுத்து இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்திய அணி உள்நாட்டில் விளையாடும் தொடர்களுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ மாற்றியுள்ளது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி அக்டோபர் 6-ஆம் தேதி குவாலியரில் நடைபெற இருக்கிறது.
இதற்கு முன்னதாக இந்த போட்டி தர்மசாலாவில் நடைபெறயிருந்த வேளையில் தற்போது அந்த போட்டி குவாலியருக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கான அட்டவணையையும் பிசிசிஐ-யை மாற்றியுள்ளது.
இதில் அடுத்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. அந்த தொடரில் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்க இருந்த முதல் டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று செப்டம்பர் 27-ஆம் தேதி துவங்க இருந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியானது அக்டோபர் 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க : முன்னேற்றத்தை சந்தித்த ரோஹித் சர்மா.. பின்னடைவை சந்தித்த ரவீந்திர ஜடேஜா – வெளியான புதிய தரவரிசை பட்டியல்
இந்த டி20 தொடரின் போட்டிகளானது ஜனவரி 22, 25, 28,31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதேபோன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் போட்டிகளானது பிப்ரவரி 6, 9,12-ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



