பாகிஸ்தானால் ஐ.பி.எல் தொடருக்கு ஏற்பட்ட சிக்கல். கோரிக்கை விடுத்த பி.சி.சி.ஐ – என்ன செய்ய போகிறது ?

BCCI
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் துவங்க இருந்த ஐபிஎல் தொடர் கொரோனோ வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பினால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்பே இல்லை என்றே செய்திகள் வெளியாகின.

Ipl cup

மேலும் ஐபிஎல் போட்டிகளை பூட்டிய மைதானத்தில் ரசிகர்கள் அல்லாமல் அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தலாம் அல்லது வெளிநாடுகளில் நடத்தலாம் என ஏகப்பட்ட செய்திகள் அவ்வப்போது வெளியாகின. இந்நிலையில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் கூறுகையில் : செப்டம்பர் அக்டோபர் மாதம் ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் ஆனால் அது ஐசிசியின் கையில்தான் இருக்கிறது.

- Advertisement -

ஏனெனில் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 தொடரை ஐசிசி ரத்து செய்தால் அந்த தேதிகளை பயன்படுத்தி ஐபிஎல் போட்டிகளை நடத்திக்கொள்ளலாம் அதற்காக காத்திருக்கிறோம். ஐசிசியின் முடிவுக்கு பின்புதான் அடுத்த கட்டத்தை யோசிக்க முடியும் என்று கூறியிருந்தா.ர் இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ வாசிம் கான் கூறுகையில் :

Eshan-PCB

இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை போட்டிகளை இலங்கை அல்லது யுஏஇ ஆகிய இரண்டு நாட்டில் ஒரு இடத்தில் வைக்க நாங்கள் திட்டமிட்டு வருகிறோம் .அப்படி திட்டமிட்டபடி செப்டம்பர் அக்டோபர் மாதம் ஆசிய கோப்பையை நடத்தினால் பிசிசிஐ ஆல் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இது குறித்து பேசிய பி.சி.சி.ஐ முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில் : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுவதை வைத்து பார்த்தால் இந்த ஆண்டு ஆசிய கோப்பை நடத்துவதிலும் அவர்களுக்கு சிக்கல் இருக்கும். எனவே அவர்கள் ஆசிய கோப்பை தொடரை நடத்தாமல் இருந்தால் ஐபிஎல் போட்டிகள் குறித்து செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் திட்டமிடலாம் ஆனாலும் அது குறித்த முறையான அறிவிப்பு வரும் வந்தால் தான் தெரியும்.

bcci

தேதிகள் பிறகு கலந்து ஆலோசிக்கப்படும் என்னைப்பொருத்தவரை எப்போதும் ஆசிய கோப்பை நடத்துவதற்கான சாத்தியம் கிடையாது என்று அவர் கூறுகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பாகிஸ்தான் சூப்பர் டி20 லீக் தொடரை அடுத்த ஆண்டு நடத்துங்கள் அப்போதுதான் குழப்பம் இல்லாமல் ஐபிஎல் நடக்கும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement