உங்க சேவை எங்களுக்கு போதும். அதிரடியாக பி.சி.சி.ஐ கழட்டி விட்ட நட்சத்திர வீரர் – ரசிகர்கள் ஏமாற்றம்

Bhuvi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ச்சியாக இடம்பிடித்து விளையாடி வரும் வீரர்களுக்கு வருடாந்திர ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்குவது வழக்கம். அந்த வகையில் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த ஒப்பந்த பட்டியலில் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் வீரர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Bhuvi

- Advertisement -

அந்த வகையில் 4 பிரிவுகளின் அடிப்படையில் முறையே ஏழு கோடி, ஐந்து கோடி, மூன்று கோடி மற்றும் ஒரு கோடி என தனித்தனி பிரிவுகளின் அடிப்படையில் வீரர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த பட்டியலில் சில இளம் வீரர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தாலும், சில வீரர்கள் இந்த ஒப்பந்தப்பட்டியில் இருந்து நீக்கப்பட்டது ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Bhuvi

ஏனெனில் இந்திய அணியின் அனுபவ சீனியர் வீரராக பார்க்கப்படும் புவனேஸ்வர் குமாருக்கு சி பிரிவில் அடிப்படை ஊதியமான ஒரு கோடி ரூபாய் என்கிற பிரிவில் கூட இடம் கொடுத்திருக்கலாம் ஆனால் இப்படி எந்த ஒரு பிரிவிலுமே அவருக்கு இடம் கொடுக்காமல் வெளியேற்றப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

சமீப காலமாகவே காயத்தால் புவனேஸ்வர் குமார் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாலும் அதுமட்டுமின்றி ஐபிஎல் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு தற்போது இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமாக இடம் பிடித்து வருவதாலும் புவனேஸ்வர் குமார் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : நடப்பு 2023 ஆம் ஆண்டிற்கான இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டியல் வெளியீடு. யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்? – வாங்க பாக்கலாம்

இப்படி அவர் இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதால் இனி வரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்கிற கேள்வியும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement