இந்திய அணியின் பயிற்சியாளருக்கு இத்தனை விண்ணப்பங்களா ? – பி.சி.சி.ஐ தேர்வுக்குழு வெளியிட்ட தகவல்

crick-BCCI
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

Ravi

- Advertisement -

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்தது. தொடர்ந்து நேற்று முன்தினத்தோடு அந்த விண்ணப்பிக்கும் நாள் முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த புதிய பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி, லால்சந்த், ராஜ்புட், ராபின் சிங் ஜெயவர்த்தனே மற்றும் கேரி க்ரிஸ்டன் போன்றவர்களோடு சேர்த்து மொத்தம் 2,000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சிக்கு ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு வெங்கடேஷ் பிரசாத் விண்ணப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

kapildev

இந்த பதவிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு கபில்தேவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. கபில்தேவ் கெயிக்வாட் மற்றும் சாந்தாரங்கசாமி உள்ளிட்டோர் அடங்கிய குழு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க உள்ளது. வரும் ஆகஸ்ட் 13 மற்றும் 14-ம் தேதி நேர்காணல் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement