கொரோனா பீதியில் இந்திய அணி விளையாட இருக்கும் முதல் தொடர் இதுதான். நிச்சயம் இந்த தொடர் நடக்கும் – பி.சி.சி.ஐ அதிரடி

Ganguly

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாத துவக்கத்தில் இருந்து எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. உலகம் முழுவதும் நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டது மட்டுமின்றி ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் துவங்க இருந்த மிகப்பெரிய பிரமாண்டமான ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ind vs sl

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் முடிந்து எப்போது கிரிக்கெட் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பிசிசிஐ இந்திய அணி அடுத்து விளையாட இருக்கும் தொடர்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 20 தொடரில் பங்கேற்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தற்போது இலங்கை சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியானது ஆனால் அதனை மறுத்து தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-க்கு எழுதிய கடிதத்தில் ஜூலை மாத இறுதியில் இலங்கை இந்திய தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு குறித்து ஆராயுங்கள்.

Sl

இந்த தொடர் திட்டமிட்டபடி நடப்பதற்காக வீரர்களின் தனிமைப்படுத்தல், வீரர்களின் நலனுக்காக காலி மைதானத்தில் கூட போட்டியை நடத்த தயாராக உள்ளோம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. மேலும் தயவு செய்து இந்த தொடரை ரத்து செய்ய வேண்டும் என்றும் அப்படி ரத்து செய்தால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். ஏனெனில் இதற்கு முன்னர் நடைபெற இருந்த இங்கிலாந்து தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எங்களது கிரிக்கெட் வாரியம் பெரிய நிதி நெருக்கடியை சந்திக்கும் என்று பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -

இதுகுறித்து தற்போது பதில் அளித்துள்ள பி.சி.சி.ஐ யின் பொருளாளர் அருண் துமால் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்வது அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது. பொது முடக்கம் முடிவுக்கு வரவேண்டும். விமான பயணங்கள் குறித்து தெரிய வர வேண்டும். கிரிக்கெட் வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுத்தால் நாங்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Ind

தற்போது இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு சென்று தளர்த்தப்பட்டு வருவதாலும் மேலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பலமாக இருப்பதால் இந்த கிரிக்கெட் தொடர் திட்டமிடப்பட்ட காலத்தில் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. பி.சி.சி.ஐ பொருளாளரின் இந்த அறிவிப்பினால் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்க இருக்கும் அறிகுறி தென்படுவதாக ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.