கங்குலியின் தலைவர் பதவிக்கு வந்துள்ள காலக்கெடு. மனுவை விசாரிக்க உள்ள உச்சநீதிமன்றம் – விவரம் இதோ

Ganguly
- Advertisement -

பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் பொருளாளராக இருக்கும் ஜெய்ஷா ஆகியோரின் பதவி காலம் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. புதிதாக அமைக்கப்பட்ட லோதா கமிட்டியின் மூலம் புதிய விதிகள் அமல் படுத்தப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பதவியில் இருக்கும் ஒருவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கமுடியாது சிறிது இடைவெளிக்கு பின்பே மீண்டும் பதவி வகிக்க முடியும்.

Ganguly

- Advertisement -

மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆறு ஆண்டுகள் ஏற்கனவே பதவி வகித்து இருந்தால் அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்துதான் பதவி வகிக்க முடியும். அதன்படி பார்த்தால் பொருளாளராக இருக்கும் ஜெய்ஷா ஆறு ஆண்டுகள் பதவி வகித்து முடித்துவிட்டார். மே 7ம் தேதி முடிவடைந்து விட்டது.

சௌரவ் கங்குலி ஏற்கனவே மேற்குவங்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கடந்த ஐந்து ஆண்டுகள் இருந்தார் இவரது பதவிக்காலம் ஜூலை 27ம் தேதி முடிவடைகிறது. இந்த ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டால் அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் இடைவெளி விட்டுத்தான் பதவி வகிக்க முடியும்.

Ganguly

இந்நிலையில் இந்த விதியை மாற்றும் படி ஏப்ரல் 21ம் தேதி பிசிசிஐ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரிக்க தற்போது உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இரண்டு வார காலம் ஒத்திவைத்துள்ளது. இந்த மனுவின் விசாரணை தீர்ப்பு வந்தால் 2025 ஆம் ஆண்டு வரை சௌரவ் கங்குலி பதவி வகிக்க முடியும்.

Ganguly-2

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு போட்டியின்றி கங்குலி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில் பி.சி.சி.ஐ சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரின் பதவி காலத்தினை நீடிக்கவே இந்த சிறப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement