ஐ.பி.எல் தொடர் தள்ளிவைப்பு. எந்த தேதியில் துவங்குகிறது தெரியுமா ? – அதிகாரபூர்வ அறிவிப்பு

Ipl cup
- Advertisement -

இந்தியாவில் பதின்மூன்றாவது சீசனாக ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 29ம் தேதி முதல் துவங்கும் என்று ஏற்கனவே போட்டி அட்டவணைகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு போட்டிகள் தடைபட்டு உள்ளன.

ipl-2018

- Advertisement -

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த வேண்டாம் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன. உலகையே அச்சுறுத்தும் இந்த கொடூர நோய்க்கு இதுவரை 4,000 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் இதுவரை 75 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்தியாவின் இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த வெளிநாட்டு பயணிகளுக்கு விசா வழங்குவதை ரத்து செய்யவும் மேலும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், பணிக்கு செல்பவர்கள், விளையாட்டுத்துறை என அனைத்து தரப்பினருக்கும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க சிக்கல் ஏற்பட்டது அதுமட்டுமின்றி தற்போது அனைத்து வகை விளையாட்டுப்போட்டிகளில் ரசிகர்கள் இன்றி நடத்தலாம் என்ற யோசனையும் ஒப்புதல் வாங்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் 29ம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்தது.

- Advertisement -

இதற்கு முடிவு தெரிவிக்கும் விதமாக தற்போது பிசிசிஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஐபிஎல் டி20 போட்டிகள் வரும் 29ம் தேதி துவங்க படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நோயின் தீவிரம் காரணமாக போட்டி ஏப்ரல் 15ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது. ஏனெனில் இந்த வைரஸ் பரவுவதை தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

csk

ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், பொதுமக்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விளையாடும் வீரர்கள் பார்க்கும் ரசிகர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்ற காரணத்தினால் ஏப்ரல் 15ஆம் தேதி வரை போட்டி ஒத்தி வைக்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்த விதத்தில் நடத்துவது லீக் ஆட்டங்களில் குறைப்பது போன்றவை குறித்து விசாரிக்கப்படும். அல்லது இந்த ஆண்டு போட்டிகளில் ரத்து செய்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கின்றன தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement