பயிற்சியை துவங்க உள்ள இந்திய அணி. தனிமைப்படுத்தப்படவுள்ள கோலி மற்றும் ரோஹித் – காரணம் இதுதான்

Rohith

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு மீண்டு வருகிறது. கொரோனா வைரசுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என பல தொழில்நுட்ப நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

IND-2

இந்த நேரத்தில் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது . இதற்காக சீக்கிரம் கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சியை பிசிசியை துவக்க உள்ளதாக தெரிகிறது. இந்த பயிற்சிகள் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் நடைபெறும் பெங்களூரில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால் அங்கு பயிற்சி செய்வது மிக எளிதாக இருக்கும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் இந்த பயிற்சியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கலந்து கொள்ள முடியாது என்ற நிலை இருக்கிறது. ஏனெனில் மும்பையில் ஊரடங்கு இன்னும் தளர்த்தப்படவில்லை. விதிகளின்படி அவர்கள் உள்ளேயே இருக்க வேண்டியதுதான். இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது…

Rohith

இந்த பயிற்சியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கலந்து கொள்ள முடியாது. மும்பையில் கட்டுப்பாடுகள் இருப்பதால் அவர்கள் அங்கேயே தங்கி இருப்பார்கள் தற்போதைய நிலைமையின் படி வீரர்களுக்கு வீடியோ காலில் வாயிலாகவும், நேரடியாகச் சென்றும் பயிற்சி அளித்து வருகிறோம். அனைத்து இந்திய சர்வதேச வீரர்களுடன் தொடர்பில் உள்ளோம்.

- Advertisement -

Rohith-2

அதிலும் வீரர்கள் அனைவரும் பயிற்சியை தொடங்க தயாராக இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் அந்த அதிகாரி. மேலும் இலங்கை சென்று விளையாட உள்ள இந்தியாவின்சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டால் இந்த பயிற்சியும் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும் அடுத்ததாக நடைபெற உள்ள ஆஸ்திரேலிய தொடருக்கான தகவலும் இதுவரை சரியாக கிடைக்கவில்லை.