ஐ.பி.எல் மற்றும் டி20 உலகக்கோப்பை ஒரே நாட்டில் நடத்த திட்டம் – பி.சி.சி.ஐ தேர்வுசெய்துள்ள நாடு எது தெரியுமா ?

BCCI
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனானது இரு வாரங்கள் வெற்றிகரமாக கடந்த நிலையில் இரண்டாவது கட்டத்தை நோக்கி பயணித்த போது வீரர்களுக்கு இடையே கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு இந்த தொடரானது பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள போட்டிகளை நடத்துவது குறித்து இன்னும் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

IPL

- Advertisement -

மேலும் பிசிசிஐ தொடர்ந்து இந்த ஐபிஎல் தொடரை எங்கு நடத்தலாம் என்பது குறித்து விவாதித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் பிசிசிஐ தலைவர் கங்குலி இந்த ஆண்டு இறுதிவரை இந்தியாவில் இந்த ஐபிஎல் தொடரை நடத்த முடியாது என்று தெளிவாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

ஐபிஎல் தொடரே இந்தியாவில் நடக்காத வேளையில் டி20 உலகக் கோப்பையையும் இங்கு நடக்காது என்பது உறுதியாகி உள்ளது. இதனால் ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை என இரண்டு தொடர்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரே நாட்டில் வைத்து முடிந்துவிட வேண்டும் என்று பிசிசிஐ திட்டம் தீட்டி வருகிறது.

அந்த வகையில் பிசிசிஐ மூன்று முக்கிய நாடுகளில் ஒன்றில் இந்த இரு தொடர்களையும் நடத்த தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இலங்கை, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் தற்போது இந்த ஐபிஎல் தொடரை நடத்த முன்வந்துள்ளது. இதில் ஏற்கனவே கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பிசிசிஐ சிறப்பாகத் திட்டமிட்டு ஐபிஎல் தொடரை முடித்து உள்ளது.

Dubai

இதனால் இந்த ஆண்டு மீதமுள்ள ஐ.பி.எல் தொடரையும் அங்கேயே முடித்துவிட்டு அதுமட்டுமின்றி டி20 உலகக் கோப்பை தொடரையும் அங்கேயே நடத்தி விடலாம் என்று முடிவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து வரும் நாட்களில் அறிவிப்புகளும் வெளியாகலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement