இனிமேல் டெஸ்ட் அணிக்கு மட்டும் தான் கோலி கேப்டனாம். ஒருநாள் மற்றும் டி20 புதிய கேப்டன் நியமனம் – பி.சி.சி.ஐ தரப்பில் வெளியான தகவல்

Ind-lose
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் பலர் கிரிக்கெட் வாரியங்களை பொருளாதார ரீதியில் தாக்கியுள்ளது. உலகின் பொருளாதார வலிமை வாய்ந்த கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஐபிஎல் தொடர் நடக்காததால் கிட்டத்தட்ட 3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை சரி கட்டுவதற்காகவும் கிரிக்கெட் காரியங்களை பொருளாதார சரிவிலிருந்து மீட்பதற்காகவும் பல புதிய உத்திகளை பிசிசிஐ யோசித்து வருகிறது.

ind-2

- Advertisement -

இதில் ஒன்றாக இரண்டு இந்திய அணிகளை ஆடுகளத்தில் களமிறக்கலாம் என்று யோசிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர்களில் டெஸ்ட் தொடருக்கு ஒரு அணியையும் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு ஒரு அணியையும் களம் இறக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் இரண்டு அணிகளுக்கும் வெவ்வேறு கேப்டனை நியமிக்கலாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. டெஸ்ட் அணிக்கு எப்போதும் போல் விராட் கோலி கேப்டனாக இருப்பார் அந்த அணி வீரர்கள் அப்படியே இருப்பார்கள். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

Rahul

டி20 அணிக்கு கே.எல் ராகுலும் ஒரு நாள் தொடருக்கு ரோஹித் சர்மாவும் கேப்டனாக நியமிக்கபடலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.இந்த மூன்று அணிகளிலும் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ,ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி ஆகியோர் அப்படியே இருப்பார்கள் ஒருசில வீரர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் 3 அணிகளிலும் இருப்பார்கள்.

- Advertisement -

டெஸ்ட் தொடருக்கு புஜாரா, அஸ்வின், ஹனுமா, விஹாரி, இஷாந்த் ஷர்மா, விருத்திமான் சஹா, அஜின்கியா ரஹானே போன்றோர் களம் இறங்குவார்கள். இருப்பினும் இதுகுறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் வரை எதுவும் உறுதி ஆகாது. ஆனால் போட்டிகளின் முறைகள் எவ்வாறு அமைகிறதோ அதனைப்பொறுத்தே இந்த தேர்வு அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohith-2

ஏற்கனவே மூன்று வகை கிரிக்கெட்டிலும் கோலி கேப்டனாக இருப்பதனால் அவருக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளதன் காரணத்தினால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு கோலியை கேப்டனாகவும், டி20 அணிக்கு ரோஹித்தை கேப்டனாகவும் நியமிக்க முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement