இந்திய வீரர்களின் பயிற்சி மைதானங்கள் ரெடி. கூடவே வெளியான ஐ.பி.எல் அப்டேட் – விவரம் இதோ

BCCI
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக நான்கு மாதங்களாக இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. மார்ச் மாதம் நடக்க இருந்த ஐபிஎல் தொடரும் தள்ளிவைக்கப்பட்டது தொடர்ந்து எந்தவித விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகிறது. மேலும் கிரிக்கெட் போட்டிகள் இன்றி ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு இருந்த முழு ஊரடங்கு தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் தொடர்பான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிசிசிஐ தற்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுகுறித்து நேற்று நடைபெற்ற நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடந்த ஐபிஎல் பொதுக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக வீரர்கள் பயிற்சி எடுக்கும் போது எந்த மைதானத்தை தேர்ந்தெடுத்து கொடுக்கலாம் என்று பேசப்பட்டது.

Ground-Dharamsala

இதில் இந்திய வீரர்களின் பயிற்சி முகாமுக்கு 3 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. துபாய், தர்மசாலா, அகமதாபாத் ஆகிய 3 இடங்களில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்யலாம் .இதில் ஏதாவது ஒரு இடத்தில் இந்திய வீரர்களின் பயிற்சி முகாம் நடக்கும் என்று தெரிகிறது.

IPLNSG

ஏனெனில் இந்த இடங்களில் தான் நோய்தொற்று குறைவாக இருக்கிறது. ஏற்கனவே துபாய் மைதானங்களில் ஐபிஎல் போட்டியை நடத்தி விடலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதங்களில் இங்குதான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement