புவனேஸ்வர் குமாரை பைனலில் ஏன் களமிறக்கினீர்கள்..! ரவி சாஸ்திரியிடம் கேளுங்கள்..! பிசிசிஐ நிர்வாகி அதிரடி கருத்து..!

Advertisement

இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்ததால் இந்திய அணி தோல்வியடைந்தது என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
bhuvanes
இந்நிலையில் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் புவனேஸ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து பிசிசிஐ அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவரிடம் கேள்வி எழுப்பபட்டது.இதற்கு அவர் புவனேஸ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டதை குறித்து என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி முடித்திருக்கிறது. டி20 தொடரில் காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் அணியில் சேர்க்கப்படவில்லை. அதே போல முதல் இரண்டு ஒரு நாள் போட்டியிலும் சேர்க்கப்படாமல் தான் இருந்தார். ஆனால், மூன்றாவது ஒரு நாள் போட்டியில் புவனேஸ்வர் குமார் களமிறங்கியதால் காயம் குணமடையாத ஒருவருக்கு எப்படி உடற்தகுதிக்குச் சான்று வழங்கப்பட்டு போட்டியில் விளையாட அனுமதித்தார்கள் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது.

மூன்றாவது போட்டியில் பங்கேற்றதால் தற்போது புவனேஸ்வர் குமாருக்கு காயம் மேலும் அதிகரித்துள்ளதால் அவர் இந்தியா திரும்புகிறார். இந்நிலையில் முழு உடற்தகுதியில்லாத ஒருவீரரை எப்படி 3-வது ஒருநாள் போட்டியில் களமிறக்கினார்கள் என்று பிசிசிஐ அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவரிடம் கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த அவர் “‘புவனேஷ்வர் குமார் உடற்தகுதியுடன் இருந்தாரா இல்லயா என்று என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். இந்த கேள்வியை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் சென்று கேளுங்கள்.
sastri
புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, அவர் முழு உடற்தகுதியில் இல்லை என்று நாங்கள் தெரிவித்திருந்தோம். அதுமட்டுமல்லாமல், அடுத்துவரும் டெஸ்ட் தொடருக்கு புவனேஷ் முக்கிய வீரர் என்பதால், அதிகமான ஓய்வு கொடுங்கள் என்று கூறிய பின்பும் களமிறக்கி இருக்கிறார்கள். எனவே, இதற்கு பதிலை உடற்தகுதி நிபுணர் பர்ஹத் தான் கூற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Advertisement