உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதால் இவர்மீது நான் கோவப்படமாட்டேன். அவருக்கும் என் ஆதரவு உண்டு – விவரம் இதோ

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி நேற்று அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். தான் பொறுப்பேற்ற உடனேயே பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இந்திய அணி குறித்து நிறைய விடயங்களை கங்குலி கூறினார். மேலும் விராட் கோலி குறித்தும் அவர் பேசியிருந்தார்.

Ganguly-2

- Advertisement -

அதில் கங்குலி குறிப்பிட்டதாவது : நான் விராட் கோலியுடன் இந்திய அணியின் முன்னேற்றம் குறித்து பேச விரும்புகிறேன். இந்திய கிரிக்கெட் கேப்டனாக அவர் மிக முக்கியமான நபர் எனவே நான் அந்த முறையிலேயே தான் இப்போது அவரை பார்க்கிறேன் நான் ஏற்கனவே கூறியதுபோல இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் எனது முழு ஆதரவு இருக்கும். மேலும் இந்திய அணி உலகின் தலை சிறந்த அணியாக உருவாக்க நினைக்கிறேன்.

உள்ளபடி கூற வேண்டும் என்றால் மூன்று நான்கு ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது. இருப்பினும் இந்திய அணியால் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை என்று பலர் கூறி வருகின்றனர். விராட் கோலி கேப்டனாக இருப்பதால் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதெல்லாம் கிடையாது. ஒவ்வொரு முறையும் உலக கோப்பையை வெல்ல முடியாது என்பது கிடையாது கண்டிப்பாக நிச்சயம் கோலி தலைமையிலான அணி முன்னேற்றம் கண்டு கோப்பையை வெல்லும்.

Kohli-1

கோலி தனது பணியை சிறப்பாகவே செய்து வருகிறார். மேலும் உலகின் தலைசிறந்த அணிகளுக்கும் அவர் சவால் விடுத்து கொண்டே தொடர்ந்து வருகிறார். அதனால் கண்டிப்பாக விராத் கோலிக்கும் எனது முழு ஆதரவு உண்டு நிச்சயம் உண்டு அவர் சாதிப்பார் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement