பி.சி.சி.ஐ இதுவரை அண்டர் 19 உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்தாதற்கு இதுவே காரணம் – வெளியான தகவல்

BCCI
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா நாட்டில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான (அண்டர் 19) உலகக் கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

jaiswal

- Advertisement -

இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அல்லது பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளில் எந்த அணி முன்னேறி இறுதிப்போட்டி வருகிறதோ அந்த அணியுடன் இந்தியா மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியா இந்த உலக கோப்பை தொடரை இந்திய நாட்டில் ஏன் நடத்தவில்லை என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அதற்கான காரணம் குறித்து பிசிசிஐ அதிகாரிகள் ஒருவர் பேசியதில் கூறியதாவது : இந்தியா இந்த தொடரை நடத்த அதற்கு லாபம் இல்லாதது ஒரு காரணம் என்று நாங்கள் நினைக்கவில்லை. லாபமற்ற முயற்சிகளுக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் இந்திய நிர்வாகம் கோடிக்கணக்கில் செலவழித்து வருகிறது.

jaiswal 1

இந்தியாவில் நடைபெறும் அண்டர் 19 உலக கோப்பை தொடருக்காக இதுவரை பிசிசிஐ ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் அதைவிட ஐசிசி தலையீடே இந்த விடயத்தில் முக்கிய காரணமாக அமைகிறது. ஐசிசி நிர்வாகத்தின் உலக கோப்பை ஒதுக்கீடு கடைசியாக 2014 – 2015 ஆம் ஆண்டு 2023 வரை முறை சுழற்சி முறையில் இந்த தொடருக்கான நடத்தும் நாடுகளை அறிவித்துள்ளது. மேலும் இந்த தொடரை நடத்த ஒருபோதும் பி.சி.சி.ஐ விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement