10 மாசமா வீரர்களுக்கு இதை கண்ணுல காட்டலையாம். என்ன செய்யப்போகிறது பி.சி.சி.ஐ – விவரம் இதோ

Raina
- Advertisement -

உலகில் மிகப்பெரும் பண பலம் வாய்ந்த, அதிகார வலிமை வைக்க கிரிக்கெட் வாரியம் ஆக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இருக்கிறது. வருடாவருடம் கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடிக்கு மேல் லாபம் மட்டுமே ஈட்டுகிறது. சமகாலத்தில் மிகவும் வலிமை வாய்ந்த கிரிக்கெட் வாரியம் ஆக திகழ்கிறது.

BCCI

- Advertisement -

இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் போன்ற கிரிக்கெட் வாரியங்களும் பண உதவி அளித்து தனது ஆதரவையும் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. அதேபோல இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் மாற்ற கிரிக்கெட் வாரியங்களை விட அதிக சம்பளம் கொடுத்து வருகிறது. இந்த வருட ஐபிஎல் தொடர் நடக்காமல் போய் இருந்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 4,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும்.

அப்படி இருந்தாலும் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்த கூட இந்திய வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு பணம் கொட்டிக் கிடக்கிறது என்று பிசிசிஐ அதிகாரிகள் கூறியதை கேட்டு இருப்போம்.

BCCI

இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக ஒப்பந்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் கொடுக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. டிசம்பர் 2019 முதல் இந்திய அணி ஆடிய எந்த போட்டிகளுக்கும் வீரர்களுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கப்படவில்லை.

IND-2

மொத்தம் ஏ ப்ளஸ் பிரிவிற்கு 7 கோடி ரூபாயும், பிரிவிற்கு 5 கோடி ரூபாயும், சி பிரிவிற்கு 3 கோடி ரூபாயும், டி ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதனை தாண்டி ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம், ஒரு ஒருநாள் போட்டிக்கு 6 லட்சமும், டி20 போட்டிக்கு 3 லட்சமும் வழங்கப்படுகிறது. இப்படி கிட்டத்தட்ட கடந்த 10 மாதங்களாக 99 கோடி ரூபாயை வீரர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் வைத்திருக்கிறது பிசிசிஐ.

Advertisement