கேப்டனாக இருந்தாலும் நீங்களும் ரூல்ஸ் பாலோ பண்ணிதான் ஆகனும் கோலியை கண்டித்த பி.சி.சி.ஐ – காரணம் இதுதான்

Kohli-2
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.

IndvsNz

இந்நிலையில் நேற்று ஆக்லாந்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்த கோலி இடைவெளி இல்லாமல் இந்திய அணி கிரிக்கெட் விளையாடி வருவது குறித்தும், இந்திய அணியின் போட்டி அட்டவணை குறித்து பேசினார். இது குறித்து கோலி கூறுகையில் : இந்தியாவைவிட ஏழு மணி நேரம் முன்னதாக வித்தியாசம் உள்ள ஒரு இடத்திற்கு பயணம் செய்து அதற்கேற்றார்போல் மாற்றிக் கொள்வது என்பது கொஞ்சம் கடினமாக விடயம்தான்.

- Advertisement -

ஆனால் இதனை விரைவில் சரி செய்து சரி செய்து கொள்ள முடியும். எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களை கிரிக்கெட் பயணத்தின் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று கருத்தை தெரிவித்திருந்தார். மேலும் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை முடித்து மூன்று நாட்கள் இடைவெளியில் அடுத்த தொடருக்காக தயாராக வெகு குறைவான நாட்களே இருப்பதால் சற்று கடினம் வேண்டும் தெரிவித்திருந்தார்.

Ind

மேலும் இந்த ஆண்டு டி20 கிரிக்கெட் உலக கோப்பை நடைபெற உள்ளதால் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால் நாங்கள் அதற்கேற்றவாறு மாறி வருகிறோம் என்றும் கோலி கூறியிருந்தார். கோலியின் இந்த பேச்சு பிசிசிஐ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது. இது குறித்து பதிலளித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் : இந்திய கேப்டன் கோலிக்கு தனது கருத்தைச் சொல்ல உரிமை உள்ளது. ஆனால் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு தான் பயண திட்டங்களை வைத்திருக்கிறோம்.

தற்போதைய இந்திய அணியின் அட்டவணையை கிரிக்கெட் நிர்வாகிகள் குழு திட்டமிட்டது. கோலி நெருக்கடியாக உணர்ந்து இருந்தால் அப்போதே தெரிவித்திருக்கலாம். அடுத்தடுத்து போட்டிகள் உள்ளதால் அதில் என்ன சிக்கல் உள்ளது என்பது புரியவில்லை. ஆனால் பிசிசிஐ சிஸ்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் அதுவே அவசியம் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement