ஷமி கைது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – பி.சி.சி.ஐ அதிகாரி

shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி அசின் ஜஹான் வரதட்சணை மற்றும் பல பெண்களுடன் தொடர்பு என பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்தவருடம் தொடர்ந்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு உறுதிப்படுத்தும் வகையில் கொல்கத்தா காவல் நிலையத்திலும் தனது கணவர் மீது அவரது மனைவி புகார் அளித்திருந்தார்.

Shami

- Advertisement -

இந்த குற்றச்சாட்டுகளை ஷமி மறுத்து இருந்தாலும் அதன்பிறகு இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அலிப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஷமி மற்றும் அவரது சகோதரருக்கு பிடிவாரன்ட் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி 15 நாட்களுக்குள் ஷமி நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஷமி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதால் இந்தியா திரும்பி உடன் விமானத்திலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Shami

இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி கூறியதாவது : முகமது சமி கைது வாரன்ட் கொடுக்கப்பட்டுள்ள செய்தியை அறிந்தோம். ஆனால் உடனடியாக சமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் நாங்கள் நேரடியாக தலையிட வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஏனெனில் நாங்கள் ஷமியின் வழக்கறிஞர் மூலம் குற்றப்பத்திரிகையை பார்த்த பின்னர் தான் முடிவெடுக்க முடியும். இந்த நேரத்தில் முடிவெடுத்தால் அது முன்னதாக தவறான முடிவாக இருக்கும் என்பதால் பொறுத்திருந்து சமி தொடர்பான நடவடிக்கை எடுப்போம் என்று பிசிசிஐ அதிகாரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement