கோலி மற்றும் ரோஹித் ஆகியோரை கஷ்டப்படுத்தும் படி பி.சி.சி.ஐ போட்டுள்ள புது ரூல்ஸ் – விவரம் இதோ

Rohith

பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்று முடிந்து விடும். இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செல்கிறது. தற்போது ஐபிஎல் தொடரில் ஆடிக்கொண்டிருக்கும் வீரர்களில் யார் யார் இந்திய அணிக்கு தேர்வாகிறார் அவர்களெல்லாம் ஆஸ்திரேலியாவிற்கு நேரடியாக இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுவார்கள்.

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 3ஆம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரை இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடக்கப்போகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 கொண்ட பெரிய தொடராக இந்த தொடர் அமையப் போகிறது.

இந்த தொடருக்காக வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்பு பயிற்சிப் போட்டியில் இந்திய வீரர்கள் கலந்துகொள்ளவும் இருக்கின்றனர். இதன் காரணமாக மொத்தம் 32 வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்க போகிறது. மேலும் உடற்பயிற்சி நிபுணர்கள், பயிற்சியாளர்கள், வேலை ஆட்கள் என 50 பேர் இந்திய அணியுடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருக்கிறார்கள்.

anushka

இதன் காரணமாக குடும்பத்தினரை அழைத்துச் செல்லக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துவித்திருக்கிறது. விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா, மற்றும் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா ஆகியோர்தான் வீரர்களை உற்சாகப்படுத்த மைதானத்தில் தென்படுவார்கள்.

- Advertisement -

Ritika

இதில் விராட் கோலியின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நேரத்தில்தான் பிசிசிஐ இந்த புதிய விதியை அமல்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக இருவரும் சோகத்தில் மூழ்குவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.