இந்திய வீரரான இவருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதினை வழங்கலாம் – பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி பரிந்துரை

Ganguly
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளை இந்திய அரசாங்கம் வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு இந்திய அணியின் துணை கேப்டன் அதிரடி துவக்க வீரர்கள் ரோகித் சர்மாவை பி.சி.சி.ஐ பரிந்துரை செய்துள்ளது.

Rohith

மேலும் இசாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையானது 2016 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான வீரர்களின் விளையாட்டு திறனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த முதல் வீரர் ஆவார்.

- Advertisement -

மேலும் 8 போட்டிகளில் 150-க்கும் மேலான ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டு துவக்கத்தில் அதிக சதங்கள் அடித்த வீரராக அறியப்பட்ட ரோஹித் ஒருநாள் போட்டிகளில் இதுவரை 28 சதங்களை அடித்துள்ளார். இதன்பேரில் அவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

rohith

மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் போது 5 சதங்கள் அடித்து அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விருதை பரிந்துரை செய்த பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியதாவது : ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். நினைத்துக்கூட பார்க்கமுடியாத, நெருங்கக்கூட முடியாது சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

Rohith

சூழ்நிலைகள் மற்றும் குறுகிய நேரத்தில் அதிக ரன்களை அடிப்பது போன்ற அனைத்தையும் அவர் செய்துள்ளார். அவரது விடா முயற்சிக்கும், அர்ப்பணிக்கும், தலைமைப் பண்புக்கும் கேல் ரத்னா விருது மிக பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதே ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை 2018 ஆம் ஆண்டு இந்திய கேப்டன் விராட் கோலி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement