பும்ரா ஓகே. ஆனா இவர எதுக்கு லிஸ்ட்ல சேத்தீங்க. அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்படவுள்ள வீரர்கள் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

Bumrah
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் விளையாட்டுத்துறையில் சாதிபவர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி கவுரவிக்கும். அதன்படி ஆண்டுதோறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சேர்ந்த வீரர்களும் அவர்களது விளையாட்டு துறைகளின் பரிந்துரையின் பேரில் இந்த விருதினை பெறுவார்கள். அதன்படி கடந்த ஆண்டு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

Bumrah

ஆனால் சீனியர் வீரர் ரவீந்திர ஜடேஜாவை இருந்ததால் கடந்த ஆண்டு பும்ராவின் பெயர் பரிந்துரை செய்யப்படாமல் போனது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு அவரின் பெயரை அர்ஜுனா விருது பட்டியலில் பரிந்துரை செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமான ஜஸ்பிரித் பும்ரா 4 ஆண்டுகளாக தனது அசத்தலான பந்து வீச்சால் உலக பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார்.

- Advertisement -

மேலும் நம்பர் 1 பவுலரான இவர் டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தும் தன்மை உடையவராக இருக்கிறார். தற்போது உள்ள நவீன கிரிக்கெட்டில் மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என இவரை கூறுவதில் ஒரு குறையும் இல்லை என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் பிசிசிஐ இந்த வருட அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யும் என்று தெரிகிறது. மேலும் மற்றொரு வீரராக ஷிகார் தவான் பெயர் அடுத்த இடத்தில் உள்ளது.

பி.சி.சி.ஐ விரும்பும் பட்சத்தில் அவரது பெயரும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் வெளியான செய்தியில் அதிகாரி ஒருவர் குறிப்பிடும்போது : கடந்த ஆண்டு ஆண்கள் பிரிவில் ஜடேஜா, ஷமி ஆகியோரின் பெயர்களை தேர்வு செய்தோம் ஆனால் கடந்த ஆண்டு பும்ரா சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே ஆனதால் சீனியர் வீரர் ஜடேஜா விற்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இதனால் சென்ற அர்ஜுனா விருதை பும்ரா தவறவிட்டார் என்றார். இந்நிலையில் தற்போது இந்த ஆண்டோடு அவருக்கு 4 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் இருப்பதினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதினாலும் இந்த விருது அவருக்கு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 26 வயதான பும்ரா இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகளிலும், 64 ஒருநாள் போட்டிகள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் : தற்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பும்ரா நம்பர் 1 பவுலர்.

Bumrah-1

அது மட்டுமின்றி தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியா வெஸ்ட்இண்டீஸ் ஆகிய மண்ணில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே ஆசிய பந்துவீச்சாளர் இவர்தான். அதனால் இம்முறை அவரது பெயர் நிச்சயம் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த ஆண்டு தான் தவறவிட்ட இந்த கவுரவ விருதினை இந்தாண்டு நிச்சயம் பும்ரா பெறுவார் எண்டது நம்பப்படுகிறது.

அதேபோன்று சென்ற ஆண்டு இந்த விருதை தவறவிட்ட முகமது ஷமியை இந்த ஆண்டு பரிந்துரை செய்ய முடியாது. ஏனெனில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுந்துள்ளன. அவரது மனைவி அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் இதன்படி பார்க்கும்போது அவரது பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்ய வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement