பி.சி.சி.ஐ யின் கண்டிஷனுக்கு தலை ஆட்டிய கோலி மற்றும் ரவி சாஸ்திரி – அப்படி என்ன கண்டிஷன் தெரியுமா ?

BCCI

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வி அடைந்ததிலிருந்து பிசிசிஐ இந்திய அணியின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. எளிதாக டிரா செய்ய வேண்டிய இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணியை தோல்வியடைய வைத்து முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது.

IND

இந்நிலையில் அடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி வலுவான அணியாக களமிறங்க வேண்டும் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்களின் தேர்வில் எந்தவித பாரபட்சமும் இருக்கக் கூடாது என பிசிசிஐ தெளிவாக உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது சாதாரண தொடராக அல்லாமல் நிச்சயம் வெற்றி பெறவேண்டிய தொடராக பார்க்க வேண்டிய சூழலில் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் கேப்டன் விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரி ஆகியோரிடம் பிசிசிஐ தரப்பு சற்று காட்டமாகவே தங்களது ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.

Shastri

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியை பலமாகக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பிசிசிஐ சீனியர் வீரராக இருந்தாலும் சரி, ஜூனியர் எதிராக இருந்தாலும் சரி யார் நல்ல பார்மில் இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் மற்ற வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தெளிவாகக் கூறியுள்ளது.

- Advertisement -

Shastri

போட்டி துவங்கும் முன்னரே அணி தயாராக இருக்க வேண்டும் என்றும் கடைசி நேரத்தில் மைதானம் வானிலை மற்றும் போட்டி அறிக்கை ஆகியவற்றை கணக்கில் கொண்டு 11 வீரர்களை இந்திய அணி வெற்றி பெறும் நோக்கில் தேர்வு செய்யப்பட வேண்டுமெனவும் பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இந்த இங்கிலாந்து தொடருக்கான வீரர்களின் தேர்வில் நிச்சயம் மாற்றம் இருக்கும் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement