ஐ.பி.எல் தொடரை நடத்தமுடியாமல் போன பி.சி.சி.ஐ – அடுத்து இழக்க இருக்கும் மிகப்பெரிய தொடர்

crick-BCCI

இந்தியாவில் கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த வேளையில் இந்த தொடரானது பாதி போட்டிகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல் வீரர்களிடையே ஏற்பட்டுவரும் கொரோனா பரவல் காரணமாக இத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ ஏற்கனவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

sandeep

அதற்கு காரணமாக கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, மூத்த அதிகாரி காசிவிஸ்வநாதன் என மூவருக்கும் டெல்லி அணியை சேர்ந்த அமித் மிஸ்ரா மற்றும் சன் ரைசர்ஸ் அணியை சேர்ந்த சஹா ஆகியோருக்கும் கொரோனா உறுதியானதால் இந்த தொடர் ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

இதனை தொடர்ந்து பயோ பபுளில் பாதுகாப்பாக இருந்தும் வீரர்களுக்கு தொற்று எவ்வாறு பரவியது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகமாக இருப்பதால் இனி வரும் காலங்களிலும் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவது ஆபத்தாகி உள்ளது.

IPL

இந்நிலையில் ஐபிஎல் தொடர் போன்று இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த டி20 உலகக்கோப்பை தொடரும் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனாவின் மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என்று கருதப்படுவதால் இந்த மாற்றம் நிச்சயம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

ஐஐசிசி உடனான கூட்டத்தில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 90 சதவீத முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இடமாற்றம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடத்த பிசிசிஐ தவற விடும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement