எல்லாரும் பயிற்சிக்கு வாங்க. ஆனா தோனி மட்டும் வேண்டும். அதிரடி முடிவை அறிவித்த பி.சி.சி.ஐ – ரசிகர்கள் அதிர்ச்சி

Dhoni
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் உலகெங்கும் கிரிக்கெட் போட்டிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் இங்கிலாந்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் துவங்க உள்ளது. மற்ற நாடுகளும் கிரிக்கெட் போட்டிகளை வெகு சீக்கிரத்தில் துவக்கம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ind

- Advertisement -

இதன் காரணமாக கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வீட்டிற்குள்ளேயே இருந்த இந்திய வீரர்களை பயிற்சிக்கு தயாராகுமாறு அறிவுறுத்தியுள்ளது பிசிசிஐ. இந்த பயிற்சி முகாமுக்கு ஒப்பந்த வீரர்கள் 30 பேர் மற்றும் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ள சில வீரர்களும் அழைக்கப்படுவார்கள். ஆனால் உலக கோப்பை தொடர் தோல்விக்கு பின்னர் அணியில் இடம்பெறாத தோனியின் நிலைதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

தோனி தற்போது ஒப்பந்த பட்டியலிலும் இல்லை. மேலும், அவர் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தையும் தேர்வுக்குழுவிற்கு கொடுக்கவில்லை. ஆனால், ஐபிஎல் தொடருக்கு கடுமையாக தயாராகிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த பயிற்சி முகாமிற்கு தோனி அழைக்க மாட்டார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது .

Dhoni

ஏற்கனவே ஒரு ஆண்டாக தோனி எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் வீரர்கள் ஆஷிஸ் நெஹ்ரா ஆகாஷ் சோப்ரா வீரர்களும் இந்த பயிற்சி முகாமுக்கு கண்டிப்பாக தோனியை அழைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால், தோனி தனது முடிவினை தீர்க்கமாக தெரிவித்தால் தான் இது நடைபெற வாய்ப்புள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Dhoni

எது எப்படி இருப்பினும் தோனி இந்தாண்டு விளையாடமாட்டார். இந்த ஆண்டு முழுவதும் வேறு பயணங்களை திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அவரது மனைவி சி.எஸ்.கே அணி ஏற்பாடு செய்திருந்த பேஸ்புக் நேரலையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement